» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
உலகக் கோப்பையில் தமிழ் வம்சாவளி வீரர்: காங்கோ அணிக்காகக் களம் கண்ட சாமுவேல் முத்துசாமி!
வியாழன் 18, ஜூன் 2026 12:04:10 PM (IST)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், ஹியூஸ்டன் நகரில் நடைபெற்று வரும் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'கே' பிரிவு லீக் ஆட்டத்தில், போர்ச்சுகல் அணிக்கு எதிராகக் களம் கண்ட காங்கோ அணியின் ஸ்டார்டிங் லெவனில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த வீரர் சாமுவேல் முத்துசாமி விளையாடிப் பெருமை சேர்த்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரைக் கைப்பற்ற வாய்ப்புள்ள வலுவான அணிகளில் ஒன்றாகக் கருதப்படும் போர்ச்சுகல் மற்றும் காங்கோ அணிகள் மோதிய லீக் ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று இரவு 10.30 மணிக்குத் தொடங்கியது.ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்திலேயே போர்ச்சுகல் அணியின் ஜோவா நெவாஸ் முதல் கோலை அடித்துத் தனது அணிக்கு முன்னிலை தேடித்தந்தார். எனினும், ஆட்டத்தின் முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (Stoppage Time) காங்கோ அணியின் விஸ்ஸா ஒரு அதிவேகப் பதில் கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றுப் பாதையில் காங்கோ அணி தனது முதல் கோலைப் பதிவு செய்து புதிய சாதனை படைத்தது.
யார் இந்த சாமுவேல் முத்துசாமி?
காங்கோ அணியின் நடுகள வீரராக (Midfielder) இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே விளையாடிய சாமுவேல் முத்துசாமி (29) ஒரு தமிழ் வம்சாவளி ஆவார். பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் பிறந்த இவருடைய தாய் காங்கோ நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை கரீபியன் தீவுகளில் ஒன்றான குவாதலூப்பைப் (Guadeloupe) பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளி ஆவார். 19-ஆம் நூற்றாண்டிலேயே இவருடைய முன்னோர்கள் தமிழகத்திலிருந்து குவாதலூப்புக்குக் குடிபெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் காங்கோ தேசிய அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வரும் சாமுவேல் முத்துசாமி, இதுவரை 50-க்கும் மேற்பட்ட சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய அசாத்திய அனுபவம் கொண்டவர் ஆவார்.
அரை நூற்றாண்டுக்குப் பின் உலகக் கோப்பையில் காங்கோ:
காங்கோ அணி இதற்கு முன்னதாக கடந்த 1974-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் மட்டுமே பங்கேற்றிருந்தது. அதன் பிறகு சுமார் அரை நூற்றாண்டு காலம் (52 ஆண்டுகள்) கடந்து, தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடருக்கு அந்த அணி தகுதி பெற்றுள்ளது. காங்கோ அணியின் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உலகக் கோப்பை ஆட்டத்தில் முழுமையாக விளையாடிய தமிழ் வம்சாவளி வீரர் சாமுவேல் முத்துசாமிக்கு இந்த ஆட்டத்தில் 5.5 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காமன்வெல்த் விளையாட்டு: மும்முறை தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்று தமிழக வீரர்கள் அசத்தல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:59:47 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஜின்கியா ரஹானே ஓய்வு: வீடியோ வெளியிட்டு உருக்கம்!
வியாழன் 30, ஜூலை 2026 4:44:14 PM (IST)

காமன்வெல்த் போட்டி 2026: இந்திய வீரர்கள் சாதனை!
புதன் 29, ஜூலை 2026 11:18:45 AM (IST)

இலங்கை டெஸ்ட் தொடர்: ஷுப்மன் கில் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:46:27 PM (IST)

வைபவ் சூர்யவன்ஷி அபாரம்: ஜிம்பாப்வேயை 3-0 என வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
திங்கள் 27, ஜூலை 2026 4:59:28 PM (IST)

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: நேரடியாகக் காலிறுதியில் களம் காணும் இந்தியா, பாகிஸ்தான்!
சனி 25, ஜூலை 2026 5:39:24 PM (IST)


