» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: நேரடியாகக் காலிறுதியில் களம் காணும் இந்தியா, பாகிஸ்தான்!
சனி 25, ஜூலை 2026 5:39:24 PM (IST)

ஜப்பானில் நடைபெறவுள்ள 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில், இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேரடியாகக் காலிறுதிச் சுற்றில் விளையாடவுள்ளன.
20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரங்களில் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள 43 விளையாட்டுப் பிரிவுகளில் 20 ஓவர் (T20) வடிவிலான கிரிக்கெட் போட்டியும் ஒன்றாகும்.
ஆண்கள் பிரிவு (10 அணிகள்):
ஆண்கள் கிரிக்கெட் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் நடப்புச் சாம்பியனான இந்தியா மற்றும் பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் நேரடியாகக் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. போட்டி அட்டவணையின்படி, இந்திய அணி அரையிறுதிச் சுற்றில் பாகிஸ்தானை எதிர்கொள்ள அதிக வாய்ப்புள்ளது.
மற்ற அணிகள் லீக் சுற்றில் மோதவுள்ளன:
'ஏ' பிரிவு: ஆப்கானிஸ்தான், ஜப்பான், நேபாளம்
'பி' பிரிவு: ஹாங்காங், மலேசியா, ஓமன்
இந்த லீக் சுற்றுகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.
பெண்கள் பிரிவு (8 அணிகள்):
பெண்கள் பிரிவில் மொத்தம் 8 அணிகள் களமிறங்குகின்றன. பெண்கள் பிரிவுக்கு லீக் சுற்றுகள் எதுவும் இல்லாமல் நேரடியாக நாக்-அவுட் முறையிலேயே போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் நடப்புச் சாம்பியனான இந்திய பெண்கள் அணி தனது காலிறுதி ஆட்டத்தில் ஜப்பான் அணியை எதிர்கொள்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: ஜண்டு குமாருக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!
சனி 25, ஜூலை 2026 4:14:59 PM (IST)

ஜிம்பாப்வேக்கு எதிரான வெற்றி: வைபவ் சூர்யவன்ஷிக்கு கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பாராட்டு!
வெள்ளி 24, ஜூலை 2026 12:39:11 PM (IST)

4 தொடர்களில் 3-இல் தோல்வி: சுப்மன் கில்லின் கேப்டன்ஷிப் குறித்து எழும் விமர்சனங்கள்!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:22:23 PM (IST)

கார்டிப் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி : தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
வெள்ளி 17, ஜூலை 2026 12:00:27 PM (IST)

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமைப்பில் மாற்றம்: ஐசிசி வருடாந்திர கூட்டத்தில் முடிவு!
வியாழன் 16, ஜூலை 2026 4:37:54 PM (IST)

பிரான்ஸை 2-0 கணக்கில் வீழ்த்தியது ஸ்பெயின்: உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்குத் தகுதி!
புதன் 15, ஜூலை 2026 12:46:04 PM (IST)


