» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : கோலி உள்ளே... ஜெய்ஸ்வால் வெளியே!!
திங்கள் 22, ஜூன் 2026 11:10:22 AM (IST)
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியைத் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
இதில் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ள நிலையில், இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்!
2027 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரை இலக்காகக் கொண்டு தயாராகி வரும் இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான முழு பலம் வாய்ந்த 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக்குழு வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடந்த ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 110 ரன்கள் குவித்து சதமடித்திருந்த போதிலும், இந்திய அணியின் பலமான பேட்டிங் வரிசை காரணமாக இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. தசைப்பிடிப்பு காயம் காரணமாகக் கடந்த தொடரில் விளையாடாத விராட் கோலி, உடற்தகுதி சோதனையில் தேர்ச்சி பெறுவதை அடிப்படையாகக் கொண்டு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் அடுத்த வாரம் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) உடற்தகுதிப் பரிசோதனை மேற்கொள்ள உள்ளார்.
பணிச்சுமை மேலாண்மை காரணமாக ஓய்வில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேல் ஆகியோர் ஒருநாள் அணிக்குத் திரும்பியுள்ளனர். பும்ராவின் வருகையால் இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவும், அக்சர் பட்டேலின் சேர்க்கையால் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஹர்ஷ் துபேயும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா இந்தத் தொடரிலும் சேர்க்கப்படவில்லை. அணியில் இளம் வீரர்கள் ஹர்ஷித் ராணா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
🚨 News 🚨
— BCCI (@BCCI) June 21, 2026
India’s ODI squad for the England tour announced.
𝗡𝗢𝗧𝗘: Varun Chakaravarthy has been ruled out of the Ireland T20I Series as he continues his rehab at the BCCI COE.
More Details ▶️ https://t.co/wOdXTQqJto#TeamIndia | #ENGvINDpic.twitter.com/t0GypgM4kp
போட்டி அட்டவணை:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி ஜூலை 14-ஆம் தேதி பர்மிங்காமிலும், இரண்டாவது போட்டி ஜூலை 16-ஆம் தேதி கார்டிஃப்பிலும் மற்றும் மூன்றாவது போட்டி ஜூலை 19-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்திலும் நடைபெறவுள்ளன. இத்தொடருக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், ஸ்ரேயஸ் ஐயர் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காமன்வெல்த் விளையாட்டு: மும்முறை தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்று தமிழக வீரர்கள் அசத்தல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:59:47 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஜின்கியா ரஹானே ஓய்வு: வீடியோ வெளியிட்டு உருக்கம்!
வியாழன் 30, ஜூலை 2026 4:44:14 PM (IST)

காமன்வெல்த் போட்டி 2026: இந்திய வீரர்கள் சாதனை!
புதன் 29, ஜூலை 2026 11:18:45 AM (IST)

இலங்கை டெஸ்ட் தொடர்: ஷுப்மன் கில் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:46:27 PM (IST)

வைபவ் சூர்யவன்ஷி அபாரம்: ஜிம்பாப்வேயை 3-0 என வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
திங்கள் 27, ஜூலை 2026 4:59:28 PM (IST)

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: நேரடியாகக் காலிறுதியில் களம் காணும் இந்தியா, பாகிஸ்தான்!
சனி 25, ஜூலை 2026 5:39:24 PM (IST)


