» சினிமா » செய்திகள்
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 அப்டேட்!
பூவையாமகேஷ் | திங்கள் 3, மார்ச் 2025 10:04:36 AM (IST)
சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பூஜை வரும் 6ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2020ம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'மூக்குத்தி அம்மன்' படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் ஆர்.ஜே பாலாஜி அறிமுகமானார். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக சில மாதங்களுக்கு முன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார்.
இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளார். படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளனர். படத்தின் தொடக்க பூஜை விழாவை பெரியளவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். வரும் மார்ச் 6ம் தேதி பூஜை விழா சென்னையில் நடைப்பெற இருக்கிறது. திரைப்படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகவுள்ளது. படத்தின் செட் அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சுந்தர் சி இயக்கத்தில் அண்மையில் வெளியான மத கஜ ராஜா திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து வடிவேலு நடிப்பில் கேங்கர்ஸ் திரைப்படம் வெளிவர இருக்கிறது. 'மூக்குத்தி அம்மன் 2' பட பூஜை வரும் 6ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் பூஜை தேதி அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!
பூவையாமகேஷ் | திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)

சிம்பு படத்திற்கு கண்டிஷன் போட்ட தனுஷ்..? வெற்றி மாறன் விளக்கம்!
பூவையாமகேஷ் | திங்கள் 30, ஜூன் 2025 12:25:38 PM (IST)

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் அதிகாரபூர்வ அறிவிப்பு
பூவையாமகேஷ் | வெள்ளி 27, ஜூன் 2025 4:21:57 PM (IST)

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 10 படங்கள்: இயக்குநர்கள் பட்டியல் அறிவிப்பு!
பூவையாமகேஷ் | வெள்ளி 27, ஜூன் 2025 4:15:45 PM (IST)

ஆஸ்கர் விருது விழா: கமல்ஹாசனுக்கு அழைப்பு!
பூவையாமகேஷ் | வெள்ளி 27, ஜூன் 2025 10:41:00 AM (IST)

கண்ணப்பா படத்தை ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை: படக்குழு எச்சரிக்கை!
பூவையாமகேஷ் | வியாழன் 26, ஜூன் 2025 5:44:50 PM (IST)
