» சினிமா » செய்திகள்

சிம்பு படத்திற்கு கண்டிஷன் போட்ட தனுஷ்..? வெற்றி மாறன் விளக்கம்!

திங்கள் 30, ஜூன் 2025 12:25:38 PM (IST)



"நான் சிம்புவை வைத்து இயக்கும் படத்திற்கு தனுஷ் கண்டிஷன் போட்டதாக வெளியான தகவல் அனைத்தும் வதந்தியே" என இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார். 

வெற்றி மாறன் இயக்கும்அடுத்த திரைப்படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியானது. இப்படம் வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் அறிவிப்பு வீடியோ படப்பிடிப்பு சமீபத்தில் நடைப்பெற்றது. இதற்காக சிம்பு புது கெட்டப்பில் காணப்படுகிறார். இப்படத்தின் கதைக்களம் வட சென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது. 

இப்படம் எடுப்பதற்கு தனுஷ் தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்துள்ளதாக தகவல் வெளியானது. படத்தின் தலைப்பிற்கும், படத்தின் கதை, கதாப்பாத்திரங்கள் ஆகியவற்றிற்கான உரிமை தங்களிடமே உள்ளதாக அது சம்பந்தமான படத்தை எடுப்பதாக இருந்தால் தங்களிடம் என் ஓ சி சான்றிதழ் வாங்க வேண்டும் என்றும் அதற்கு 20 கோடி ரூபாய் வரை கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்த விளக்கம் அழித்து வீடியோ ஒன்றை வெற்றி மாறன் வெளியிட்டுள்ளார் அதில் அவர் "நான் அடுத்த திரைப்படம் நடிகர் சிம்புவை வைத்து இயக்கவுள்ளேன். இப்படம் வட சென்னை டைம்லைனில் நடக்க கூடியவையாகும். வட சென்னை திரைப்படத்தின் கதைக்களம், கதாப்பாத்திரம்,கதை என அனைத்திற்கும் சொந்தக்காரர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம். நான் இதுக்குறித்து தனுஷிடம் பேசியபோது அவரிடம் 

இப்படத்தை என்னால் வட சென்னை பட உலகத்தில் என்னால் இயக்க முடியும் இல்லை என்றால் இது தனி திரைப்படமாகவும் இயக்க முடியும். அது உங்கள் கையில் தான் இருக்கிறது.

அதற்கு தனுஷ் "உங்களுக்கு எது சரியாக இருக்குமோ அதை செய்யுங்கள். அதற்காக எனக்கு ஒரு பணமும் வேண்டாம் " என கூறினார். என்னை பற்றியோ, படத்தை பற்றியோ, தனுஷை பற்றியோ யூடியூபில் பேசுவது எனக்கு வேதனை அளித்தது. தனுஷுக்கும் எனக்கும் உள்ள உறவு இந்த ஒரு சம்பவத்தினாலோ, படத்தினாலோ உடைந்து விடாது.

நடிகர் சிம்புவும் படத்திற்கு எது சரியாக இருக்குமோ அதை செய்யுங்கள். என கூறினார். என்னை யாரும் வற்புறுத்தி ஒரு விஷயத்தை செய்ய வைக்க முடியாது. இணையத்தில் பேசுவது அனைத்தும் வதந்தியே" என கூறியுள்ளார் வெற்றி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory