» சினிமா » செய்திகள்
லாஸ் ஏஞ்சல்ஸில் ஆஸ்கர் விருது விழா கோலாகலம்: 5 விருதுகளை அள்ளியது‘அனோரா’!
செவ்வாய் 4, மார்ச் 2025 11:23:52 AM (IST)

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ‘அனோரா’ திரைப்படம் 5 விருதுகளை வென்றது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி அரங்கில், 97-வது ஆஸ்கர் விருது விழா, இந்திய நேரப்படி நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. சர்வதேச அளவில் திரைத்துறையின் உயர்ந்த விருது விழாவான இதில் உலகில் பல்வேறு நாடுகளிலிருந்து திரையுலகினர் இதில் பங்கேற்றனர்.
விழாவை, பிரபல நகைச்சுவை நடிகர் கோனன் ஓ பிரைன் தொகுத்து வழங்கினார். இதில், ‘எமிலியா பரேஸ்’ என்ற பிரெஞ்சு மொழி படம், அதிகபட்சமாக 13 பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத பிற மொழி படம் என்ற சாதனையை படைத்தது. இதில், பாலியல் தொழிலாளியின் காதலைப் பேசிய ‘அனோரா’ படம், 5 விருதுகளை வென்றது.
சிறந்த படம் (சீன் பேக்கர்), சிறந்த இயக்குநர் (சீன் பேக்கர்), சிறந்த ஒரிஜினல் திரைக்கதை (சீன் பேக்கர்), சிறந்த நடிகை (மைக்கி மேடிசன்), சிறந்த படத்தொகுப்பு (சீன் பேக்கர்) ஆகிய பிரிவுகளில் ‘அனோரா’ விருதுகளை வென்றது. ஒரே படத்துக்காக, 4 ஆஸ்கர் விருதுகளை ஒருவரே (சீன் பேக்கர்) வெல்வது இதுதான் முதல் முறை.
‘த புரூட்டலிஸ்ட்’ திரைப்படத்துக்கு 3 விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகர் (அட்ரியன் ப்ரோடி), சிறந்த ஒரிஜினல் இசை (டேனியல் ப்ளூம்பெர்க்), சிறந்த ஒளிப்பதிவு (லால் கிராலே) ஆகிய பிரிவுகளில் இந்தப் படம் விருதுகளை வென்றது.
மற்ற விருது விவரம்
- துணை நடிகர்: கீயரன் கல்கின் (எ ரியல் பெய்ன்)
- துணை நடிகை: ஜோ சால்டானா (எமிலியா பரேஸ்)
- தழுவல் திரைக்கதை: கான்க்ளேவ்
- விஷுவல் எபெக்ட்ஸ்: டூன்: பார்ட் 2
- சிறந்த ஒலி அமைப்பு: டூன்: பார்ட் 2
- வெளிநாட்டுத் திரைப்படம்: ஐம் ஸ்டில் ஹியர் (பிரேசில்)
- ஆவணப்படம்: நோ அதர் லேண்ட்
- ஆவணக் குறும்படம்: தி ஒன்லி கேர்ள் இன் த ஆர்கேஸ்ட்ரா
- அனிமேஷன் படம்: ஃப்ளோ
- ஆடை வடிவமைப்பு: பால் டாஸ்வெல் (விக்கட்)
- ஒப்பனை, சிகையலங்காரம்: தி சப்ஸ்டேன்ஸ்
பிரியங்கா சோப்ரா மற்றும் குனீத் மோங்கா தயாரிப்பில் டெல்லியில் எடுக்கப்பட்ட ‘அனுஜா' என்ற குறும்படத்துக்கு விருது கிடைக்கவில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மானுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் சந்திப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:32:42 PM (IST)

சிம்பு படத்திற்கு கண்டிஷன் போட்ட தனுஷ்..? வெற்றி மாறன் விளக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 12:25:38 PM (IST)

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் அதிகாரபூர்வ அறிவிப்பு
வெள்ளி 27, ஜூன் 2025 4:21:57 PM (IST)

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 10 படங்கள்: இயக்குநர்கள் பட்டியல் அறிவிப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 4:15:45 PM (IST)

ஆஸ்கர் விருது விழா: கமல்ஹாசனுக்கு அழைப்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 10:41:00 AM (IST)

கண்ணப்பா படத்தை ட்ரோல் செய்தால் கடும் நடவடிக்கை: படக்குழு எச்சரிக்கை!
வியாழன் 26, ஜூன் 2025 5:44:50 PM (IST)
