» சினிமா » செய்திகள்
தூத்துக்குடியில் அஜித்தின் குட்பேட் அக்லி ரிலீஸ் : ரசிகர்கள் உற்சாகம்
வியாழன் 10, ஏப்ரல் 2025 3:35:07 PM (IST)
தூத்துக்குடியில் இன்று ரிலீசான நடிகர் அஜித்குமாரின் குட்பேட் அக்லி திரைப்படத்தை அமைச்சர் கீதாஜீவன் கண்டு ரசித்தார்.
இதைத்தொடர்ந்து காலையிலேயே திரையரங்குகள் முன்பு அஜித் ரசிகர்கள் குவிய தொடங்கினர் அஜித் ரசிகர்களின் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதியது தூத்துக்குடியில் பாலகிருஷ்ணா, கிளியோபட்ரா பெரிசன் பிளாசா, கே எஸ் பி எஸ் கணபதி திரையரங்கம் உள்ளிட்ட 4 திரையரங்கில் திரைப்படம் வெளியாகி உள்ளது
தூத்துக்குடியில் கிளியோபாட்ரா திரையரங்கம் முன்பு அஜித் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். திரைப்படத்தை காண தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வருகை தந்தார். அப்போது அஜித் ரசிகர்கள் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இப்போது தூத்துக்குடி மாவட்ட தலைமை அஜித் ரசிகர் மன்ற தலைவர் தீனா சம்பத் மாவட்ட பொருளாளர் சந்தன ராஜ் ஆகியோர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அஜித் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்டமான கேக்கை வெட்டி ரசிகர்களுடன் உற்சாகமாக கொண்டாடினார். பின்னர் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்து ரசித்தார். அமைச்சருடன் தூத்துக்குடி மாவட்ட தலைமை அஜித் ரசிகர் மன்ற தலைவர் தீனா சம்பத் மாவட்ட பொருளாளர் சந்தன ராஜ், திமுக மாவட்ட பிரதிநிதி தெர்மல் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்: நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:13:20 AM (IST)

ஜெயிலர் 2: மீண்டும் ரஜினியுடன் இணையும் ஃபகத் ஃபாசில்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:10:24 PM (IST)

எஸ்டிஆர் 49 படத்தில் எங்களது அதிரடியைப் பார்க்கலாம் : சந்தானம்!
வியாழன் 24, ஏப்ரல் 2025 4:39:59 PM (IST)
