» சினிமா » செய்திகள்
கன்னட மொழி விவகாரம்: கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு!
சனி 31, மே 2025 12:27:10 PM (IST)
கன்னட மொழி சர்ச்சை விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், தமிழ்மொழியில் இருந்துதான் கன்னடம் உருவானது என்று கூறினார். அவரின் கருத்துக்கு கர்நாடக அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், கன்னட அமைப்பினரும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர்.
மேலும். அவரின் கருத்துக்காக மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினர். இல்லையெனில், கர்நாடகத்தில் தக் லைஃப் திரையிடப்பட மாட்டாது என்றும் கூறினர். இருப்பினும், தனது கருத்துக்காக ஒருபோதும் மன்னிப்பு கோர மாட்டேன் என்று கமல்ஹாசன் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். இந்த நிலையில், கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தென்னிந்திய நடிகர் சங்கம் கூறும்போது, நடிகர் கமல்ஹாசனை கன்னட மொழிக்கு எதிரானவர் போன்று மாயத் தோற்றத்தை சித்திரித்து, அவதூறு பரப்புவது முற்றிலும் தவறானது. அவரின் கருத்தைத் தவறான அர்த்தத்தில் பரப்புரை செய்கின்றனர். இந்திய மொழிகள் அனைத்துக்கும் முறையான உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துபவர் அவர் என்று தெரிவித்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடியன்ஸ் எதிர்பார்ப்புக்காக நான் கதை எழுதுவதில்லை: லோகேஷ் கனகராஜ்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 12:32:04 PM (IST)

விஜயை நேரில் பார்த்தால் முகத்தில் ஓங்கி குத்துவேன்: நடிகர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:28:44 PM (IST)

ரஜினிக்கு விரைவில் பாராட்டு விழா: நடிகர் விஷால்
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 12:31:15 PM (IST)

கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார்: மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா புகார்!
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 12:19:36 PM (IST)

3 கெட்டப்பில் விஷால் : மகுடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
புதன் 27, ஆகஸ்ட் 2025 5:46:32 PM (IST)

கேரளாவில் அமரன் திரைப்படத்திற்கு விருது!!
புதன் 27, ஆகஸ்ட் 2025 12:09:25 PM (IST)
