» சினிமா » செய்திகள்
ஆடியன்ஸ் எதிர்பார்ப்புக்காக நான் கதை எழுதுவதில்லை: லோகேஷ் கனகராஜ்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 12:32:04 PM (IST)

ஆடியன்ஸ் எதிர்பார்ப்புக்காக நான் கதை எழுதுவதில்லை. ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் சிறப்பு என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரித்து, ஆகஸ்ட் 14-ம் தேதி உலகமெங்கும் வெளியானது. இப்படத்தினை விமர்சகர்கள் கடுமையாக சாடினார்கள். எனினும் உலகம் முழுவதும் இப்படம் ரூ.500 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் ‘கூலி’ படம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: "படம் குறித்து எதையும் நான் சொல்லவில்லை. ஆனால் படம் குறித்த பார்வையாளர்களின் உற்சாகம்தான் என்னை இங்கே உட்கார வைத்திருக்கிறது. இந்த உற்சாகம் இல்லையென்றால் நாங்கள் படம் எடுக்க முடியாது. அதை குறை சொல்லவும் முடியாது.
உதாரணமாக, ‘கூலி’ எல்சியூ என்றோ, டைம் டிராவல் படம் என்றோ நான் சொல்லவில்லை. ஆனால் பார்வையாளர்களே அப்படி நினைத்துவிட்டார்கள். நான் கடைசி நேரம் வரை ஒரு ட்ரெய்லர் கூட ரிலீஸ் செய்யவில்லை. 18 மாதங்கள் முடிந்தளவுக்கு அனைத்தையும் மறைத்துதான் வைத்திருந்தேன். ஆனால் ரஜினி படம் இப்படி இருக்கும், லோகேஷ் படம் இப்படி இருக்கும் என்று ஆடியன்ஸ் அதீத உற்சாகத்தில் தினமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அதை எப்படி தடுக்கமுடியும். அவர்களின் எதிர்பார்ப்புக்காக நான் கதை எழுதுவதில்லை. ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் சிறப்பு. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லையென்றால் நான் முயற்சி செய்கிறேன். அவ்வளவுதான்” இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அருணாச்சலம் படத்துக்குப் பின் இணையும் ரஜினி - சுந்தர்.சி!
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:10:49 AM (IST)

இந்த தீபாவளி நம் இளைஞர்களுக்கு சொந்தமானது : ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்!
வெள்ளி 17, அக்டோபர் 2025 10:31:51 AM (IST)

ஜன நாயகன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:35:06 PM (IST)

தென் தமிழ்நாட்டின் அரசியலை மையப்படுத்தி படம்: பைசன் குறித்து மாரி செல்வராஜ்..!
திங்கள் 13, அக்டோபர் 2025 11:44:24 AM (IST)

கத்தி, ரத்தம், சத்தம் என இந்த மூன்றை நம்பித்தான் இயக்குநர்கள் : எஸ்.ஏ.சந்திரசேகரன் வருத்தம்
சனி 11, அக்டோபர் 2025 4:11:49 PM (IST)

வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ்.டி.ஆர். நடிக்கும் அரசன்!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 4:10:03 PM (IST)
