» சினிமா » செய்திகள்
பிரபுதேவா-வின் 'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை பாடிய ஏ.ஆர்.ரகுமான்!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:20:25 AM (IST)

சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு பிரபுதேவா-வின் மூன்வாக் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான், அப்படத்தில் 5 பாடல்களை பாடியுள்ளார்.
சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு நடனப் புயல்- இசைப்புயல் இணைந்துள்ள படம் 'மூன்வாக்'. அதாவது பிரபுதேவாவும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்துள்ள இப்படத்தை என்.எஸ்.மனோஜ் இயக்கி உள்ளார். 'மூன்வாக்' என்பது 'பாப்' இசை உலகின் மன்னர் என்று போற்றப்படும் மைக்கேல் ஜாக்சனின் உலகப் புகழ் பெற்ற நடன அசைவாகும். இந்த படத்தின் உலகளாவிய திரையரங்க வினியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றி இருக்கிறது.
இப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். குடும்ப பொழுதுபோக்காக, நகைச்சுவை கலந்து உருவாகி உள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு உரிமையை 'லஹரி மியூசிக்' நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 'மூன்வாக்' படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், 'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 5 பாடல்களின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நடிகை சமந்தா 2-வது திருமணம்: இயக்குநரை கரம்பிடித்தார்
திங்கள் 1, டிசம்பர் 2025 3:50:33 PM (IST)

நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சனி 29, நவம்பர் 2025 4:05:40 PM (IST)

நூறு பிறவிகள் எடுத்தாலும், ரஜினியாகவே பிறக்க விரும்புகிறேன்: ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!!
சனி 29, நவம்பர் 2025 10:38:32 AM (IST)

சபரிமலை கோவிலில் தங்கம் அபகரிப்பு வழக்கு: நடிகர் ஜெயராமை கைது செய்ய முடிவு!
வெள்ளி 28, நவம்பர் 2025 5:25:35 PM (IST)

பிரபல நடிகையுடன் கிரிக்கெட் வீரர் அனிருத்தா ஸ்ரீகாந்த் திருமணம்!
வியாழன் 27, நவம்பர் 2025 4:43:43 PM (IST)

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் விஜய் சேதுபதி?
வியாழன் 27, நவம்பர் 2025 12:18:37 PM (IST)

