» சினிமா » செய்திகள்
அதிக முறை எரியும் பாராசூட்டிலிருந்து குதித்து டாம் குரூஸ் கின்னஸ் சாதனை!
வெள்ளி 6, ஜூன் 2025 5:22:18 PM (IST)

மிஷன் இம்பாஸிபிள் - தி பைனல் ரெக்கானிங் திரைப்படத்தின் சண்டைக் காட்சியின் மூலம் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளார்.
ஹாலிவுட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஆக்சன் படங்களின் பட்டியலில் 'மிஷன்: இம்பாசிபிள்' படங்களுக்கு கண்டிப்பாக இடம் இருக்கும். ஆக்சன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன. சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து 1996ம் ஆண்டு முதன் முதலில் மிஷன் இம்பாஸிபிள் படம் வெளியானது. முதல்பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்ததாக 7-பாகங்கள் வெளியானது. இவை அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன.
Also Read
கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை இந்த சீரிஸின் 7 பாகம் வெளியானது. அதில் 'ஏஐ தொழில்நுட்பம்' மையமாக வைத்து முந்தைய பாகம் உருவாக்கப்பட்டது. முந்தைய பாகத்தை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்யூரி இந்தப் பாகத்தையும் இயக்கி இருந்தார். இந்த பாகத்தில் டாம் எந்த வித டூப் இல்லாமல் மலையில் இருந்து கீழே குதித்த காட்சி இணையத்தில் மிகப்பெரிய வைரலானது.
சமீபத்தில் இந்தப் பட வரிசையில் 8வது பாகம் வெளியாகி உலக அளவில் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்நிலையில், தற்போது வெளியான 'மிஷன்: இம்பாஸிபிள் - தி பைனல் ரெக்கானிங்' திரைப்படத்தின் சண்டைக் காட்சியின் மூலம் கின்னஸ் சாதனையிலும் டாம் குரூஸ் இடம்பிடித்துள்ளார்.
'மிஷன்: இம்பாஸிபிள் - தி பைனல் ரெக்கானிங்' திரைப்படத்தின் சண்டைக் காட்சியின் மூலம் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளார். சர்வதேச அளவில் பல விருதுகளைக் குவித்த ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின், அதிரடியான சண்டைக் காட்சிகளினாலே உலகளவில், 'மிஷன்: இம்பாஸிபிள்' திரைப்படங்கள் மிகவும் பிரபலமடைந்துள்ளன. இந்தப் படங்களுக்கென்று, தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ள நிலையில், இந்தப் படத்தின் கதாநாயகனான அவர், தீயில் எரியும் பாரசூட்டின் மூலம் உயரத்திலிருந்து குதிக்கும் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம், சுமார் 16 முறை அவர் எரியும் பாராசூட்டிலிருந்து குதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிக முறை எரியும் பாராசூட்டிலிருந்து குதித்த நபர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இந்தப் பிரத்யேக சண்டைக் காட்சியை, தென் ஆப்பிரிக்கா நாட்டின் டிராகென்ஸ்பெர்க் நகரத்தில் படம் பிடித்துள்ளனர். சுமார் 75,000 அடி உயரத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று அங்கிருந்து டாம் க்ரூஸ் எரியும் பாராசூட்டின் மூலம் குதித்து, அதன் கயிறுகளை அறுத்து, மற்றொரு பாராசூட்டின் மூலம் தப்பிக்கும் படியான ஸ்டண்டுகளை அவர் மேற்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடியன்ஸ் எதிர்பார்ப்புக்காக நான் கதை எழுதுவதில்லை: லோகேஷ் கனகராஜ்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 12:32:04 PM (IST)

விஜயை நேரில் பார்த்தால் முகத்தில் ஓங்கி குத்துவேன்: நடிகர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:28:44 PM (IST)

ரஜினிக்கு விரைவில் பாராட்டு விழா: நடிகர் விஷால்
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 12:31:15 PM (IST)

கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார்: மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா புகார்!
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 12:19:36 PM (IST)

3 கெட்டப்பில் விஷால் : மகுடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
புதன் 27, ஆகஸ்ட் 2025 5:46:32 PM (IST)

கேரளாவில் அமரன் திரைப்படத்திற்கு விருது!!
புதன் 27, ஆகஸ்ட் 2025 12:09:25 PM (IST)
