» சினிமா » செய்திகள்
ரஜினிகாந்த் வழுக்கி விழுந்ததாக பரவும் வீடியோ!
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 11:35:35 AM (IST)

ரஜினிகாந்த் வழுக்கி விழுந்ததாக இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ரஜினிகாந்த் வழுக்கி விழுந்ததாக இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வைரலாகி வருகிறது. அதாவது, தலையில் நரைத்த முடி, அரை கால்சட்டை மற்றும் அரை கை பனியன் அணிந்த ஒருவர் தனது வீட்டுத் தோட்டத்தில் நடந்து செல்லும் போது ஈரம் காரணமாக , வழுக்கி விழுகிறார். பின்னர் அவரே மீண்டும் நடக்கத் தொடங்குகிறார். அவர் ரஜினிகாந்த் தோற்றத்தில் இருப்பதால், வீடியோவில் உள்ளவர் ரஜினிகாந்த் என கருதினர்.
அந்த வீடியோவை பார்த்த சிலர், "கவனமாக இருங்கள், தலைவா" என்று பதிவிட்டனர். இந்நிலையில், இந்த வீடியோவில் இருப்பவர் ரஜினிகாந்த் அல்ல என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வீடியோவில் அந்த நபரின் முகம் தெளிவாகத் தெரியாததால் ஏற்பட்ட குழப்பம் என்றும், ரஜினிகாந்த் தற்போது நலமாக இருப்பதாகவும் படக்குழு சார்பிலும், ரஜினிகாந்த் சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடியன்ஸ் எதிர்பார்ப்புக்காக நான் கதை எழுதுவதில்லை: லோகேஷ் கனகராஜ்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 12:32:04 PM (IST)

விஜயை நேரில் பார்த்தால் முகத்தில் ஓங்கி குத்துவேன்: நடிகர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:28:44 PM (IST)

ரஜினிக்கு விரைவில் பாராட்டு விழா: நடிகர் விஷால்
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 12:31:15 PM (IST)

கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார்: மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா புகார்!
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 12:19:36 PM (IST)

3 கெட்டப்பில் விஷால் : மகுடம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
புதன் 27, ஆகஸ்ட் 2025 5:46:32 PM (IST)

கேரளாவில் அமரன் திரைப்படத்திற்கு விருது!!
புதன் 27, ஆகஸ்ட் 2025 12:09:25 PM (IST)
