» சினிமா » செய்திகள்
திருப்பதி கோவிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம்!
திங்கள் 4, ஆகஸ்ட் 2025 11:25:28 AM (IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உள்ள சூர்யா, ரெட்ரோ படத்தை அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்துள்ளார். திரிஷா, சுவாசிகா, ஷிவதா, நாட்டி நடராஜ், யோகிபாபு என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
இதைத்தொடர்ந்து தற்போது வெங்கி அட்லூரி இயக்கும் தனது 46 வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடித்து வருகிறார் .
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். மனைவி ஜோதிகா, மகன் தேவ் உள்ளிட்டோருடன் திருப்பதி சென்ற சூர்யாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. திருப்பதி கோவில் வளாகத்தில் நடிகர் சூர்யாவை பார்த்ததும் ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்: அதிகாரபூர்வமாக அறிவிப்பு
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:32:42 PM (IST)

நடிகர்கள் அரசியலுக்கு வரலாம்... ஆனால் அரசியலில் நடிக்கக் கூடாது’ - சரத்குமார்
திங்கள் 3, நவம்பர் 2025 9:31:13 PM (IST)

கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல: ஊடகங்களுக்கும் பங்கு உண்டு: அஜித்குமார்
சனி 1, நவம்பர் 2025 10:27:43 AM (IST)

இயக்குநருடன் விஷால் மோதல் எதிரொலி : மகுடம் படப்பிடிப்பு நிறுத்தம்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:36:30 PM (IST)

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன்!
புதன் 29, அக்டோபர் 2025 12:38:59 PM (IST)

போலி ஆடிஷன் அழைப்புகள்: இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் எச்சரிக்கை!
புதன் 29, அக்டோபர் 2025 11:55:44 AM (IST)

