» சினிமா » செய்திகள்
கத்தி, ரத்தம், சத்தம் என இந்த மூன்றை நம்பித்தான் இயக்குநர்கள் : எஸ்.ஏ.சந்திரசேகரன் வருத்தம்
சனி 11, அக்டோபர் 2025 4:11:49 PM (IST)

கத்தி, ரத்தம், சத்தம் என இந்த மூன்றையும் நம்பித்தான் இன்றைய இயக்குநர்கள் படம் எடுக்க வருகிறார்கள் என்று எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார்.
பள்ளிப் பருவ மாணவர்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம், ‘ராம் அப்துல்லா ஆண்டனி’. ‘சூப்பர் சிங்கர்’ மூலம் பிரபலமான பூவையார், ஆண்டனி கதாபாத்திரத்திலும் அப்துல்லா கதாபாத்திரத்தில் அர்ஜுன், ராம் கதாபாத்திரத்தில் அஜய் அர்னால்டு ஆகியோரும் நடித்துள்ளனர். த.ஜெயவேல் இயக்கியுள்ளார். எல்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.ஆர். கிருஷ்ண சேத்தன் இசை அமைத்துள்ளார். அன்னை வேளாங்கண்ணி ஸ்டூடியோஸ் சார்பில் கிளமண்ட் சுரேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் எஸ்.ஏ. சந்திரசேகரன், அகத்தியன், பேரரசு, பொன்ராம், எஸ்.ஆர். பிரபாகரன், தயாரிப்பாளர் மதியழகன், நடிகர் உதயா கலந்து கொண்டனர். இசைத்தட்டை வெளியிட்டு எஸ்.ஏ சந்திரசேகரன் பேசும்போது, "இப்போதைய ட்ரென்ட் சூப்பர் ஸ்டாரை வைத்து படம் எடுத்தால் போட்ட பணத்தை எடுத்து விடலாம். தயாரிப்பாளர் தப்பித்து விடுவார். இல்லை என்றால் புதியவர்களை வைத்து படம் பண்ண வேண்டும். இதற்கு நடுவில் உள்ளவர்களை வைத்து படம் பண்ணினால் தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விடுவார்கள். சூப்பர் ஸ்டார்களை வைத்து படம் எடுத்தால் அதற்கு பைனான்ஸ் கொடுப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். நல்ல கதையை வைத்து படம் எடுப்பதற்கு பைனான்ஸ் பண்ண ஆட்கள் தயாராக இல்லை.
ஒரு காரியத்தை ஆரம்பிக்கும்போது நாம் ஜெயிப்போம் என நினைத்து ஆரம்பித்தால், கண்டிப்பாக ஜெயிப்போம். இப்போது வரை, நான் ஜெயிப்பேன் என்று தான் படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் படம் வெற்றி அடையும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இன்றைய தலைமுறை, வன்முறையை தான் ரசிக்கிறார்கள் என்று சொல்லும் இயக்குநர்கள், கத்தி, ரத்தம், சத்தம் என இந்த மூன்றையும் நம்பித்தான் படம் எடுக்க வருகிறார்களே தவிர, கதை எதுவும் கிடையாது” என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொங்கல் ரேசில் களமிறங்கும் புதிய படங்கள்!
திங்கள் 12, ஜனவரி 2026 8:30:02 PM (IST)

பராசக்தி படத்திற்கு யுஏ சான்றிதழ்: நாளை வெளியாகிறது
வெள்ளி 9, ஜனவரி 2026 12:58:38 PM (IST)

பிக் பாஸ் வீட்டிலிருந்து ரூ. 18 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்!
வெள்ளி 9, ஜனவரி 2026 11:19:49 AM (IST)

ஜன நாயகன் வெளியாகும் நாளே உண்மையான திருவிழா: விஜய்க்கு ஆதரவாக சிம்பு, ரவி மோகன்!
வியாழன் 8, ஜனவரி 2026 4:52:28 PM (IST)

வெறுப்புப் பிரச்சாரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சினிமாவை காப்பாற்ற ஒன்றிணைவோம்: கார்த்திக் சுப்பராஜ்
வியாழன் 8, ஜனவரி 2026 4:11:15 PM (IST)

துருவ நட்சத்திரம் படத்தின் மீதான பிரச்சினைகள் முடிந்தது : கவுதம் மேனன் தகவல்
செவ்வாய் 6, ஜனவரி 2026 5:42:26 PM (IST)

