» சினிமா » செய்திகள்
அரசன் படத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தம்!
செவ்வாய் 25, நவம்பர் 2025 11:45:20 AM (IST)

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள அரசன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் ‘அரசன்’. தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 24-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், திட்டமிட்டப்படி தொடங்கப்படவில்லை. இதற்கு வேல்ஸ் நிறுவனம் – சிம்பு இருவருக்கும் இடையேயான பேச்சுவார்த்தையே காரணம் எனக் கூறப்படுகிறது.
தற்போது சிம்பு உடன் ‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘விடுதலை’ படத்திற்கு பிறகு மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் ‘செக்க சிவந்த வானம்’ படத்துக்குப் பிறகு சிம்பு – விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கவுள்ளார்கள். சிம்பு இல்லாமல் இதர காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.
‘அரசன்’ படத்தில் ‘வடசென்னை’ படத்தில் நடித்த முக்கிய கதாபாத்திரங்களும் நடிக்கவுள்ளார்கள். இதற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் படக்குழு இருக்கிறது. அதற்குள் சிம்புவுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையும் முடிவுக்கு வரும் என தெரிகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பராசக்தி படத்திற்கு யுஏ சான்றிதழ்: நாளை வெளியாகிறது
வெள்ளி 9, ஜனவரி 2026 12:58:38 PM (IST)

பிக் பாஸ் வீட்டிலிருந்து ரூ. 18 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்!
வெள்ளி 9, ஜனவரி 2026 11:19:49 AM (IST)

ஜன நாயகன் வெளியாகும் நாளே உண்மையான திருவிழா: விஜய்க்கு ஆதரவாக சிம்பு, ரவி மோகன்!
வியாழன் 8, ஜனவரி 2026 4:52:28 PM (IST)

வெறுப்புப் பிரச்சாரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சினிமாவை காப்பாற்ற ஒன்றிணைவோம்: கார்த்திக் சுப்பராஜ்
வியாழன் 8, ஜனவரி 2026 4:11:15 PM (IST)

துருவ நட்சத்திரம் படத்தின் மீதான பிரச்சினைகள் முடிந்தது : கவுதம் மேனன் தகவல்
செவ்வாய் 6, ஜனவரி 2026 5:42:26 PM (IST)

இயக்குநர் பாரதிராஜா உடல்நிலை குறித்து வதந்தி : மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
திங்கள் 5, ஜனவரி 2026 4:42:39 PM (IST)

