» சினிமா » செய்திகள்

அதிகம் ட்ரோல் ஆன திரைப்படம் அஞ்சான்தான் : இயக்குநர் லிங்குசாமி

வியாழன் 27, நவம்பர் 2025 11:12:52 AM (IST)



நடிகர் சூர்யா - இயக்குநர் லிங்குசாமி கூட்டணியில் உருவாகி கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "அஞ்சான்”. இந்தப் படத்தில், நடிகர்கள் வித்யூத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாயி, சமந்தா, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று விமர்சனத்திற்குள்ளானது. ஆனால், சில ரசிகர்களிடம் பாராட்டுகளையும் பெற்றது. தற்போது, அஞ்சானின் எடிட் செய்யப்பட்ட புதியு வடிவம் நாளை (நவ. 28) மறுவெளியீடாகிறது. இந்த நிலையில், இதற்கான நிகழ்வில் பேசிய இயக்குநர் லிங்குசாமி, "அஞ்சான் திரைப்படம் 11 ஆண்டுகளுக்கு முன் வெளியானபோது மிகப்பெரிய கேலி, கிண்டல்களைச் சந்தித்தது. இன்று, நிறைய படங்கள் ட்ரோல் செய்வதற்கு முன்பே அதிகம் ட்ரோல் ஆன திரைப்படம் அஞ்சான்தான். 

ஆனால், நான் சந்தித்த பல ரசிகர்கள் அஞ்சான் தங்களுக்குப் பிடித்திருந்தாகவே சொன்னார்கள். ஒரு படத்தை எடுப்பது மட்டுமே இயக்குநர் கையில் உள்ளது. அது என்னவாக மாறும் என்பது தெரியாது. அஞ்சானை மறுவெளியீடு செய்யத் திட்டமிட்டபோது மீண்டும் சவால் விடுவதற்காக அல்ல. வெற்றியும் தோல்வியும் முக்கியமல்ல. உண்மையான சூர்யா ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காகவும் ஒரு திருப்திக்காகவும் அஞ்சானை மறுவெளியீடு செய்கிறோம். இப்படம் 2 மணி நேரம் ஓடக்கூடிய வடிவமாகத் திரைக்கு வருகிறது”


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory