» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இன்ஸ்டாகிராமில் 10 கோடி பேர் பின் தொடரும் உலகத் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி
வியாழன் 26, பிப்ரவரி 2026 12:03:36 PM (IST)
இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் என்ற சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைவிட இரண்டு மடங்கு அதிக பின்தொடர்பாளர்கள் இன்ஸ்டாகிராமில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014 ஆம் ஆண்டு மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் சமூக ஊடகப் பக்கத்தில் பிரதமர் மோடி கணக்கைத் தொடங்கினார். உலக அரசியல் தலைவர்களின் பிரதமர் மோடிக்கு அடுத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 4.32 கோடி பின்தொடர்பாளர்களை கொண்டுள்ளார். இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவை 1.5 கோடி பேரும், பிரேசில் அதிபரை 1.44 கோடி பேரும், துருக்கி அதிபரை 1.16 கோடி பேரும், அர்ஜென்டினா அதிபரை 64 லட்சம் பேரும் பின்தொடர்கிறார்கள்.பிரதமர் மோடிக்கு அடுத்த இடங்களில் உள்ள 5 உலக அரசியல் தலைவர்களின் மொத்த பின் தொடர்பாளர்களைவிட மோடியை அதிக பேர் பின்தொடர்கிறார்கள். இந்திய அளவிலும் மோடிக்கும் மற்ற அரசியல் தலைவர்களின் பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கைக்கும் நிறைய இடைவெளி இருக்கின்றது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை 1.61 கோடி பேரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை 1.26 கோடி பேரும் பின்தொடர்கிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பெட்டிகளில் பயணிக்க அனுமதி: யு.டி.ஐ.டி அட்டை இருந்தால் போதும்!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 10:20:33 AM (IST)

அக்சய் குமார் மகளுக்கு ஆன்லைன் கேமில் பாலியல் தொல்லை: மர்ம ஆசாமி கைது!
சனி 25, ஏப்ரல் 2026 5:35:24 PM (IST)

யமுனையில் படகு சவாரி செய்ய உங்களுக்கு இருக்கிறதா? பிரதமருக்கு மமதா சவால்!
சனி 25, ஏப்ரல் 2026 3:58:40 PM (IST)

நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு: நாடு முழுவதும் 28 லட்சம் பேர் எழுதுகிறார்கள்!
சனி 25, ஏப்ரல் 2026 12:41:13 PM (IST)

மசூதிகளுக்கு பெண்கள் செல்ல தடையில்லை: முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தகவல்!
சனி 25, ஏப்ரல் 2026 11:01:50 AM (IST)

பீகாரில் முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!
சனி 25, ஏப்ரல் 2026 10:49:21 AM (IST)

