» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மாநில சுயாட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆதரவு
புதன் 4, மார்ச் 2026 4:35:59 PM (IST)

மத்திய - மாநில உறவுகள் குறித்து மறுஆய்வு செய்து, மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்களைப் பெறத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்து வரும் முயற்சிகளுக்குக் கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
மத்திய - மாநில உறவுகள் தொடர்பாகத் தமிழக அரசு அமைத்த உயர்நிலைக் குழுவின் முதற்கட்ட அறிக்கை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குச் சித்தராமையா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: கூட்டாட்சி என்பது வெறும் அரசியல் கோரிக்கை அல்ல; அது நமது அரசியலமைப்பின் அடிப்படைச் சட்டக்கட்டமைப்பு.
நிதி மற்றும் சட்ட விவகாரங்களில் அதிகாரம் மத்திய அரசிடம் குவிக்கப்படுவது, அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் வகுத்த சமநிலையைச் சீர்குலைத்துள்ளது. மாநிலங்கள் தங்களுக்குரிய பொறுப்புகளை நிறைவேற்றப் போதுமான அதிகாரமும், நிதி சுதந்திரமும் அவசியம்.
மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில்: அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து விவாதிக்கவும், கூட்டாட்சிச் சமநிலையை மீட்டெடுக்கவும் 'மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில்' (Inter-State Council) போன்ற வலுவான தளத்தை மத்திய அரசு அமைத்துத் தர வேண்டும். ஜனநாயக மற்றும் கூட்டாட்டுக் கட்டமைப்பை வலுப்படுத்தும் இத்தகைய முயற்சிகளில் கர்நாடக அரசு ஆக்கபூர்வமாகப் பங்களிக்கத் தயாராக உள்ளது என அவர் உறுதியளித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி:
சித்தராமையாவின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்: "கூட்டாட்சி கருத்தியலைப் புதுப்பிக்கும் இந்த முயற்சி, ஒரு கூட்டு முயற்சியாக அமைய வேண்டும் எனத் தாங்கள் அங்கீகரித்திருப்பதைப் பாராட்டுகிறேன். பன்முகத்தன்மை கொண்ட இந்தியக் குடியரசின் ஒற்றுமையை ஒற்றைத்தன்மையால் நிலைக்கச் செய்ய முடியாது; அரசியலமைப்பின் வழியிலான நம்பகத்தன்மை மூலமே அதைச் செய்ய இயலும் எனத் தாங்கள் கூறிய கருத்து மிகச் சரியானது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேங்கி நிற்கும் பயங்கரவாத வழக்குகள்: விரைவு நீதிமன்றங்கள் அமைக்க உச்சநீதிமன்றம் நடவடிக்கை
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:33:31 PM (IST)

ராஜஸ்தான் சுத்திகரிப்பு ஆலையில் தீவிபத்து : பிரதமரின் திறப்பு விழா ஒத்தி வைப்பு!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:27:48 AM (IST)

தமிழக மக்கள் ஸ்டாலினுக்கு மீண்டும் ஒருமுறை வெற்றியைப் பரிசளிப்பார்கள்: கெஜ்ரிவால் நம்பிக்கை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 11:45:23 AM (IST)

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம்: இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 12.8% சரிவு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 10:55:14 AM (IST)

ஹார்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு – மத்திய அரசு கடும் கண்டனம்!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:34:00 AM (IST)

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு: அமைச்சரவை ஒப்புதல்
சனி 18, ஏப்ரல் 2026 5:27:06 PM (IST)

