» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பேரூராட்சிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்: தென்காசி ஆட்சியர்

புதன் 25, ஆகஸ்ட் 2021 5:04:06 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளில் (திருவேங்கடம் பேரூராட்சி நீங்கலாக) வீட்டு குடிநீர் இணைப்புகள் பெறுவதற்கு பொதுமக்கள் விண்ணப்பப் படிவத்தை tenkasi.nic.in/forms/   என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பேரூராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

புதிதாக வீட்டு குடிநீர் இணைப்பு பெற விரும்பும் நபர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்ப பதிவுக் கட்டணம், பேரூராட்சி மூலம் நிர்ணயம் செய்யப்பட்ட வைப்புத் தொகை மற்றும் சென்டேஜ் கட்டணத்தை வங்கி வரைவோலை மூலம் செலுத்தி வீட்டு குடிநீ;ர் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory