» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆட்சியர் அலுவலக ஊழியர் வீட்டில் ரூ.9 லட்சம் நகைகள் திருட்டு: போலீஸ் விசாரணை

சனி 3, டிசம்பர் 2022 10:21:45 AM (IST)தென்காசியில் ஆட்சியர் அலுவலக ஊழியர் வீட்டில் ரூ.9 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

தென்காசி குத்துக்கல்வலசை கே.ஆர்.காலனி பகுதியைச் சேர்ந்த ஜெகன்நாத் என்பவருடைய மனைவி மகேஸ்வரி. இவர் தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் ஆதி திராவிட நலத்துறை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.  இரவு இவர் வழக்கம் போல் வீட்டில் தூங்கினார்.  எழுந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 23 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். 

இதுகுறித்து அவர் தென்காசி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மோப்பநாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். 

மகேஸ்வரி இரவில் தூங்கும் முன்பு கதவை பூட்டாமல் திறந்து வைத்து உள்ளார். இதனால் மர்மநபர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து நகைகளை திருடி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ.9 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து

சாமான்யன்Dec 3, 2022 - 02:03:12 PM | Posted IP 59.91*****

மோப்ப நாய் கவ்வி பிடிக்கவில்லை?! எப்பவும் இப்படித் தான் செய்தி வருது...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory