» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்: 1 மணி நேரம் 10 நிமிடம் பயண நேரம் குறைகிறது
சனி 1, ஏப்ரல் 2023 10:39:01 AM (IST)
சென்னை-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேர மாற்றம் இன்று (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வந்தது. இதன்மூலமாக பயணிகளுக்கு 1 மணி நேரம் 10 நிமிடம் பயண நேரம் குறைகிறது.
மதுரை-நெல்லை இடையே முழுமையாக அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் நெல்லை-திருச்செந்தூர் இடையே ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில், தண்டவாளம் பலப்படுத்தப்பட்டு, மின்மயமாக்கலும் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்து நெல்லை -திருச்செந்தூர் இடையே டீசல் என்ஜின்கள் மூலம் இயக்கப்பட்டு வந்த ரயில்கள், மின்சார என்ஜின்கள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் (சனிக்கிழமை) நெல்லை-திருச்செந்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று முதல் ரயில்களின் கால அட்டவணை மாற்றி இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16105) நெல்லை சந்திப்புக்கு காலை 5.55 மணிக்கு வந்து 6 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, முன்னதாக அதாவது காலை 4.55 மணிக்கு வந்து 5 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் செய்துங்கநல்லூருக்கு 5.17 மணிக்கு வந்து 5.18 மணிக்கு புறப்படுகிறது. ஸ்ரீவைகுண்டத்துக்கு 5.31 மணிக்கு வந்து 5.32 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
இதேபோல, நாசரேத்துக்கு 5.42 மணிக்கு வந்து 5.43 மணிக்கும், குரும்பூருக்கு 5.49 மணிக்கு வந்து 5.50 மணிக்கும், ஆறுமுகநேரிக்கு 5.55 மணிக்கு வந்து 5.56 மணிக்கும், காயல்பட்டினத்துக்கு 5.59 மணிக்கு வந்து 6 மணிக்கும் புறப்படும். திருச்செந்தூருக்கு காலை 8 மணிக்கு செல்வதற்கு பதிலாக காலை 6.50 மணிக்கு சென்றடைகிறது. இதன்மூலமாக பயணிகளுக்கு 1 மணி நேரம் 10 நிமிடம் பயண நேரம் குறையும்.
இதேபோல, திருச்செந்தூர்-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16106) இரவு 7.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 8.10 மணிக்கு புறப்படும். காயல்பட்டினத்துக்கு 8.17 மணிக்கு வந்து 8.18 மணிக்கும், ஆறுமுகநேரிக்கு 8.20 மணிக்கு வந்து 8.21 மணிக்கும், குரும்பூருக்கு 8.26 மணிக்கு வந்து 8.27 மணிக்கும், நாசரேத்துக்கு 8.35 மணிக்கு வந்து 8.36 மணிக்கும், ஸ்ரீவைகுண்டத்துக்கு 8.45 மணிக்கு வந்து, 8.46 மணிக்கும், செய்துங்கநல்லூருக்கு 8.54 மணிக்கு வந்து 8.55 மணிக்கும், நெல்லை சந்திப்புக்கு 9.10 மணிக்கு வந்து 9.15 மணிக்கும் புறப்பட்டு செல்கிறது. இதன்மூலம் ஒரு மணி நேரம் வேகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுதவிர பாலக்காடு - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் (எண்: 16731) 30 நிமிடம் வேகப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், நெல்லை - திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டு, புறப்பாடு மற்றும் வருகை நேரமும் மாற்றப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
SivasundaramApr 7, 2023 - 08:58:47 PM | Posted IP 162.1*****
Useful information Thanks sir
SivakumarApr 4, 2023 - 06:16:58 PM | Posted IP 162.1*****
Nice
சி.கிருஷ்ணமூர்த்திApr 4, 2023 - 09:34:36 AM | Posted IP 162.1*****
பயனுள்ள நல்ல செய்தி நன்றி.
N. RamachandranApr 4, 2023 - 08:57:51 AM | Posted IP 162.1*****
I Information very useful. Many thanks
VelmuruganApr 4, 2023 - 07:08:05 AM | Posted IP 162.1*****
Good Decision
சத்யா உதயசந்திரன்Apr 2, 2023 - 10:57:41 PM | Posted IP 162.1*****
இந்த நேரம் மாற்றத்தால் பக்தர்களுக்கு கூடுதலாக கோவிலில் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும்
மேலும் தொடரும் செய்திகள்

கூவாகத்தில் மிஸ் திருநங்கை அழகி போட்டி: நெல்லை ரேணுகா முதலிடம்!
செவ்வாய் 13, மே 2025 11:32:20 AM (IST)

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.எஸ். தங்கபாண்டியன் மறைவு: அமைச்சர் அஞ்சலி!
திங்கள் 12, மே 2025 3:31:32 PM (IST)

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

SivasundaramApr 7, 2023 - 08:59:51 PM | Posted IP 162.1*****