» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாசரேத் பேருந்து நிலையத்தில் ரூ.50லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் தளம்!

திங்கள் 4, டிசம்பர் 2023 8:31:46 AM (IST)



நாசரேத்  பேருந்து நிலையத்தில்  ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள சிமெண்ட் கான்கிரீட் தளத்திற்கான பணியினை கனிமொழி எம்.பி.கொடியசைத்து   துவக்கி வைத்தார். 
          
நாசரேத் பேருந்து நிலையத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள சிமெண்ட் கான்கிரீட் தளத்திற்கான பணியினை துவக்கி வைக்கும் விழா நடந்தது. விழா விற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  லட்சுமிபதி தலைமை வகித்தார். தமிழக மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,  ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட ஊராட்சி தலை வர் பிரம்மசக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
                 
தூத்துக்குடி பாராளுமன்ற    உறுப்பினர்  கனிமொழி கருணாநிதி  புதிதாக அமைக்கப்படவுள்ள சிமெண்ட் கான்கிரீட் தளத்திற்கான பணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் திமுக வர்த்தக அணி மாநில துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வார்திருநகரி ஒன்றிய திமுகசெயலாளர் நவீன்குமார், முன்னாள் எம்.பி., ஏடிகே ஜெயசீலன், நாசரேத் பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி, நகர திமுக செயலாளர் ஜமீன் சாலமோன்,  நகர அவை தலைவர் கருத்தையா, முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வக்குமார்,   பேரூராட்சி துணை தலைவர் அருண் சாமுவேல் ,  பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன், பேரூராட்சி கவுன்சிலர் கள் ஜேம்ஸ், சாமுவேல், பத்திரகாளி,  அதிசயமணி, நாசரேத் கிராம நிர்வாக அலுவலர் முத்துமாலை,மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழக செயலாளர் ஐஜினஸ்குமார், திமுக வார்டு செயலாளர்கள், கிளை செயலாளர்கள்,திமுக,  காங்கிரஸ் தொண்டர்கள்  மற்றும் பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory