» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
திங்கள் 4, டிசம்பர் 2023 8:34:30 AM (IST)
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 115 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதேபோல் கடனாநதி-22, ராமநதி-32, கருப்பாநதி-50, குண்டாறு-75, அடவிநயினார்-42, ஆய்க்குடி-63, செங்கோட்டை-80, சிவகிரி-17 மில்லி மீட்டர் மழை பதிவானது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
இந்த தடை நேற்றும் நீடித்தது. தற்போது சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு வருவதால் அவர்கள் நேற்று குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அருவிகளில் நீர்வரத்து குறைந்ததும் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் குளிக்க அனுமதிப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)
