» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் அவசரகால கட்டுப்பாட்டு அறை: ஆட்சியர் தகவல்

திங்கள் 4, டிசம்பர் 2023 10:06:53 AM (IST)

தென்காசியில்  அவசரகால கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் தொலைபேசி எண்கள் செயல்பட்டு வருகிறது. 

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  தெரிவித்திருப்ப தாவது : தென்காசி மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில், பேரிடர் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரகால கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி எண்களும் செயல்பட்டு வருகிறது. 

கட்டணமில்லா தொலைபேசி எண் - 1077மற்றும்  04633 290 548 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம்.   பெறப்படும் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் பணிபுரியும் அலுவலர்கள் மூலம் புகார்களை சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களிடம் நேரடியாக தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் துரை இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory