» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை அருகே வீடு புகுந்து புதுப்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் வெறிச்செயல்!
புதன் 6, டிசம்பர் 2023 8:21:33 AM (IST)
நெல்லை அருகே வீடு புகுந்து புதுப்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. ஒருதலை காதலால் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி விலக்கு ஹவுசிங் போர்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆதவன். இவரது மகள் கனிமொழி (வயது 21). இவர் ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் உறவினரான சுத்தமல்லி விலக்கு பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாதன் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர் திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேைல செய்து வந்தார். இதனால் கனிமொழி தனது கணவருடன் திருப்பூருக்கு சென்றுவிட்டார். பின்னர் கல்லூரி படிப்பை தொடருவதற்காக கனிமொழி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இதற்கிடையே பேட்டை சாஸ்திரிநகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன் (28) என்பவர் கனிமொழியை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
தற்போது கல்லூரிக்கு சென்று வந்த கனிமொழியிடம் மணிகண்டன் தன்ைன காதலிக்கும்படி தொல்லை கொடுத்து வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கனிமொழி இதுகுறித்து தனது தந்தையிடம் தெரிவித்தார். அவர் மணிகண்டனை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் நேற்று முன்தினம் கனிமொழி வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த அவரை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் கை மணிக்கட்டு, தோல் பகுதியில் அவருக்கு வெட்டு விழுந்தது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து உடனடியாக பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கனிமொழியை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மணிகண்டனை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)
