» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் முடி திருத்தும் கட்டணம் உயர்வு : சங்க கூட்டத்தில் முடிவு!

புதன் 6, டிசம்பர் 2023 12:18:43 PM (IST)

தூத்துக்குடியில் முடி திருத்தும் கட்டணம் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்ட முடித்திருத்துவோர் மற்றும் மருத்துவர் சங்க நிர்வாகிகள் கூட்டம் சி.ஐ.டி.யூ மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் டென்சில் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ரசல் சிறப்புரை ஆற்றினார். 

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நாகராஜ் பேசுகையில் "தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகதிகளிலும் பரவும் வைரஸ் காய்ச்சல் கட்டுப்படுத்திட மருத்துவ கண்காணிப்பு நடத்திட வேண்டும். பெட்ரோல், கேஸ், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் கட்டிங், ஷேவிங் கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

2024 ஜனவரி 1, முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இதன்படி கட்டிங் 130, ஏசி சலூன் 150, மாடல் கட்டிங் 200, ஏசி சலூன் 250, சேவிங் 80, ஏசி சலூன் 100, சிறுவர் கட்டிங் 5 வயது உட்படவர்களுக்கு 100, ஏசி சலூன் 120, தாடி ஒதுக்குதல் 100, ஏசி சலூன் 120 கட்டிங் & சேவிங் டை 350, ஏசி சலூன் 400, ஹெட் மசாஜ் 220 ஏசி சலூன் 250, பேபி கட்டிங் 150 ஏசி சலூன் 200, ஸ்பெஷல் சேவிங் போம் 100 ஏசி சலூன் 150, தலைவழித்தல் & சேவிங் 250 ஏசி சலூன் 300 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

வளன்Dec 8, 2023 - 08:47:00 PM | Posted IP 172.7*****

அப்படியே நீங்க திருத்திட்டாலும் 1.50 பைசா பிளேடை செலவு பண்ணிட்டு 130 ரூபாயா

WinsDec 7, 2023 - 04:01:15 PM | Posted IP 172.7*****

Cost of Living கடைசில எல்லாம் நம்ம தாலைல தான் வந்து விடுயுது Gurunatha இதுக்கு ஒரு முடிவே இல்லையா

PeriayasamyDec 7, 2023 - 11:18:12 AM | Posted IP 172.7*****

Ungaloda shop rendum increase panua vendiyathan pola

ManoDec 6, 2023 - 10:17:18 PM | Posted IP 172.7*****

Even the metro cities like Chennai have lower tariff for hair cuts in well acclaimed and posh saloons. Tuticorin is getting costly despite having sub par services wrt hair saloons. :/

rjtutDec 6, 2023 - 03:45:23 PM | Posted IP 172.7*****

அட ஏங்க மொத்தத்துல சலூன் கு உள்ள வந்தா 500 னு பிக்ஸ் பண்ணிருங்க . எப்படி வெட்டினாலும் ஒரே மாதிரி தான் இருக்கு மிஷினை போட்டு தேய்ச்சு விடுறதுக்கு ஏன் இவ்வளவு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory