» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நிதி நிறுவனம் மோசடி குறித்து விழிப்புணர்வு
புதன் 6, டிசம்பர் 2023 3:16:01 PM (IST)

தூத்துக்குடியில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நிதி நிறுவனம் மோசடி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடியில் எட்டையாபுரம் ரோட்டில் உள்ள கமல் ஹெல்த் கேர் நிறுவனத்தில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் உதவி ஆய்வாளர் விஜயலெட்சுமி சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயலெட்சுமி ஆகியோர் முன்னிலையில் நிதி நிறுவனம் மோசடி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் ஜெயந்தி துண்டு பிரசுரங்களை அங்கு பணிபுரியும் பெண்களிடம் வழங்கி பேசியதாவது: வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கட்டாயமாக இந்திய ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் இணையதளத்தில் பட்டியிடப்பட்டுள்ளது.
அனைத்து நிதி நிறுவனங்களும் பொதுமக்களிடமிருந்து பணத்தை முதலீடாக பெறமுடியாது. ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் டெபாசிட் வாங்குவதற்க்கு அதிகாரமுள்ள நிறுவனங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதி நிறுவனங்கள் மக்களிடமிருந்து டெபாசிட் பெறுவதற்காக பரிசுப் பொருட்கள் ஊக்கத்தொகை முதலியவற்றை தருவது தடை செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

PoolithikDec 6, 2023 - 05:59:32 PM | Posted IP 172.7*****