» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் : ஆட்சியருக்கு கோரிக்கை!

வியாழன் 7, டிசம்பர் 2023 12:51:30 PM (IST)

சாயர்புரம் காமராஜ் நகரிலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று  சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா சாயாபுரம் தேரி ரோட்டில் உள்ள காமராஜ் நகரில் டாஸ்மாக் கடை உள்ளது. அதன் அருகில் போப் கல்லூரி, போப் பொறியியல் கல்லூரி, விகாஷா ஆங்கில மேல்நிலைபள்ளி, ஜெயா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் வழிபாட்டு ஸ்தலங்கள் தொழ்ற்சாலைகள் உள்ளன. 

அந்த டாஸ்மாக் வெளியூரிலிருந்து ரவுடிகளும், குண்டர்களும் வந்து மது கடைக்கு அருந்திவிட்டு அந்தவழியாக செல்கின்ற பொதுமக்களிடம் அடாவடித்தனம் பண்ணி பணம் பறித்து வருகின்றனர். அந்த வழியாக பெண்கள் செல்ல முடியவில்லை. இரவு 10 மணிக்குமேல் யாரும் செல்ல முடியவில்லை. இதனால் பொதுமக்களுக்கு பல இடையூறுகள் நடந்து வருகின்றன. மேலும் டாஸ்மாக் கடையிலிருந்து 100 அடி தூரத்தில் பெண்கள் கழிப்பறை உள்ளது. 

சில ரவுடிகள் மது அருந்திவிட்டு பெண்கள் கழிப்பறைக்கு சென்று கதவை தட்டி அங்கு இருக்கின்றவர்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர். 100 மீட்டா தொலைவில் நர்சரி உள்ளது. அங்கு அதிகமாக பெண்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை.எனவே பொதுமக்கள் நலன் கருதி டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.  


மக்கள் கருத்து

உண்மDec 7, 2023 - 03:18:57 PM | Posted IP 162.1*****

இது தான் விடியல் ஆட்சி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory