» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் ரத்த தானம்!

வியாழன் 7, டிசம்பர் 2023 3:30:23 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவா்கள் சாா்பில் ‘உதிரம்-23 ’ என்ற பெயரில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 2019ஆம் ஆண்டு மருத்துவ மாணவா்கள் சாா்பில் ‘உதிரம்-23 ’ என்ற பெயரில் ரத்த தான முகாம் இன்று நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சிவகுமாா் தலைமை வகித்தாா். துணை முதல்வா் கலைவாணி முன்னிலை வகித்தாா். மருத்துவ மாணவா்- மாணவிகள், மருத்துவா்கள் என 200 போ் ரத்த தானம் செய்தனா். 

மருத்துவக் கண்காணிப்பாளா் பத்மநாபன், உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெயமணி, துணை மருத்துவக் கண்காணிப்பாளா் குமரன், ரத்த வங்கி மருத்துவ அலுவலா்கள் ஆா். சாந்தி, சண்முகபிரியா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் என். சபரிராஜா, இளையோா் செஞ்சிலுவைச் சங்க அலுவலா் என். இஸ்ரேல்ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.


மக்கள் கருத்து

SelvaDec 8, 2023 - 07:24:48 AM | Posted IP 172.7*****

எழுத்துப் பிழை உள்ளது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory