» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை அருகே நிலத்தகராறில் என்ஜினீயர் வெட்டிக்கொலை; உறவினர்கள் 3 பேர் கைது
செவ்வாய் 16, ஜூலை 2024 8:30:02 AM (IST)
நெல்லை அருகே நிலத்தகராறில் என்ஜினீயர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதை தடுக்க முயன்ற அவரது தந்தைக்கும் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக உறவினர்கள் 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
நெல்லையை அடுத்த தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள பெரியசாமிபுரம் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் கலைச்செல்வன் (வயது 28), என்ஜினீயர். இவர்களுக்கு சொந்தமான நிலம் ஊருக்கு வடக்கு பகுதியில் உள்ளது. கலைச்செல்வனின் தாய்மாமா அதே ஊரைச் சேர்ந்த வேலுச்சாமி (64). இவருக்குரிய நிலமும் பரமசிவம் நிலமும் அருகருகே உள்ளன. இந்த நிலம் தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து கயத்தாறு போலீசில் புகார் செய்யப்பட்டது. நேற்று காலையில் பரமசிவம், கலைச்செல்வன் ஆகியோர் தங்களது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றனர். அப்போது, அங்கு வேலுச்சாமி, அவரது மகன்கள் கவுதம் (24), மதன் (22) ஆகியோரும் வந்தனர்.
அப்போது, அவர்களுக்கு இடையே திடீரென்று வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வேலுச்சாமி உள்பட 3 பேரும் அரிவாளால் கலைச்செல்வனை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க வந்த பரமசிவத்தையும் வெட்டியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக கயத்தாறு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே கலைச்செல்வன் பரிதாபமாக இறந்தார். பரமசிவமுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு ெசய்து வேலுச்சாமி, கவுதம், மதன் ஆகிய 3 பேரையும் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொலை செய்யப்பட்ட கலைச்செல்வனுக்கும், சென்னையைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் நிச்சயிக்கப்பட்டு வருகிற செப்டம்பர் மாதம் 8-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது. நெல்லை அருகே நிலத்தகராறில் என்ஜினீயர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: தனியார் பள்ளி பஸ்கள் தீவைத்து எரிப்பு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:48:22 PM (IST)

அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு; அதிகாரிகள் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:11:40 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வெள்ளி 18, ஜூலை 2025 4:26:47 PM (IST)

சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் : நீதிபதி பங்கேற்பு
வெள்ளி 18, ஜூலை 2025 11:36:25 AM (IST)

திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : தெக்ஷண மாற நாடார் சங்கம்
வியாழன் 17, ஜூலை 2025 4:51:08 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது: சபாநாயகர் பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:41:27 PM (IST)
