» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் பாரதியார் நினைவு தின போட்டி : மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்
வெள்ளி 8, நவம்பர் 2024 12:27:34 PM (IST)
39-ஆவது ஆண்டு பாரதியார் நினைவு தின போட்டிகள் திருநெல்வேலி நகரத்தில் உள்ள லிட்டில் ஃபிளவர் பள்ளியில் நவ. 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
பாரதியார் உலக பொதுச் சேவை நிதியம் சார்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்கள் அளவிலான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, 39-ஆவது ஆண்டு பாரதியார் நினைவு தின போட்டிகள் திருநெல்வேலி நகரத்தில் உள்ள லிட்டில் ஃபிளவர் பள்ளியில் நவ. 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
பேச்சு, கட்டுரை, பாட்டு, கவிதை என நான்கு வகை போட்டிகள் நடுநிலை (6,7,8) உயர்நிலை (9,10), மேல்நிலை (11,12) வகுப்புகள், கல்லூரி (கலை அறிவியல், பொறியியல் - தொழில்நுட்பம் ) ஆகிய நான்கு பிரிவுகளாக நடைபெறுகிறது.
பேச்சுப் போட்டியானது ‘பாரதி கண்ட விடுதலை அல்லது பாரதி கண்ட புதுமைப்பெண்’ (நடுநிலைப் பிரிவு), ‘பாரதி கண்ட சமுதாயம் அல்லது பாரதியின் வசன கவிதைகள்’ (உயர்நிலைப் பிரிவு), ‘பாரதி கண்ட சமூக நீதி அல்லது பாரதி கண்ட அறிவியல் சிந்தனை’ (மேல்நிலைப் பிரிவு) , ‘பாரதி கண்ட சமூகநீதி அல்லது பாரதி கண்ட அறிவியல்’ (கல்லூரி) ஆகிய தலைப்புகளில் நடைபெறுகிறது.
கட்டுரை போட்டியானது ‘பாரதியும் தமிழும் அல்லது பாரதி கண்ட இளைஞர்’ (நடுநிலைப் பிரிவு), ‘காணிநிலம் வேண்டும் அல்லது காக்கை குருவி எங்கள் ஜாதி’ (உயர்நிலைப் பிரிவு), ‘அக்கினி குஞ்சொன்று கண்டேன் அல்லது எத்தனை கோடி இன்பம் வைத்தாய்’ (மேல்நிலைப் பிரிவு ), ‘அக்கினி குஞ்சொன்று கண்டேன் அல்லது எத்தனை கோடி இன்பம் வைத்தாய்’ (கல்லூரிப் பிரிவு ) ஆகிய தலைப்புகளில் நடைபெறுகிறது.
பாட்டுப் போட்டியில் கலந்து கொள்வோர் பாரதியார் பாடல்களை மட்டும் மூன்று நிமிட கால அளவில் பாட வேண்டும். பாடும் போது இசைக் கருவிகள் பயன்படுத்தக்கூடாது. கவிதைப் போட்டியானது மேல்நிலை, கல்லூரி என இரு பிரிவுகளில் நடைபெறுகிறது. அதற்கான தலைப்புகள் போட்டி தொடங்கும்போது வழங்கப்படும். மரபு மற்றும் புதுக்கவிதைகள் எழுதலாம். கவிதை எழுத கால அளவு 30 நிமிடம் வழங்கப்படும்.
போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் நவ.10ஆம் தேதி காலை 9.30 மணிக்குள் லிட்டில் ஃபிளவர் பள்ளியில் பெயரைப் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் சான்றிதழ், மதிய உணவு வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் அடையாள அட்டையுடன் வர வேண்டும்.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பாரதியார் உலக பொதுச் சேவை நிதிய அறக்கட்டளைத் தலைவர் அ. மரியசூசை, பொதுச் செயலர் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன், பொது நிதியாளர் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி, துணை பொதுச் செயலர் கவிஞர் சு.முத்துசாமி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் சுகுமார் எச்சரிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:25:05 PM (IST)

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)
