» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சிறுமியிடம் செல்போனில் ஆபாச படம் கேட்டு தொந்தரவு : கல்லூரி மாணவர் போக்சோவில் கைது
வியாழன் 10, ஏப்ரல் 2025 9:04:33 AM (IST)
செல்போனில் ஆபாச படம் அனுப்புமாறு 14 வயது சிறுமியிடம் தொந்தரவு செய்த கல்லூரி மாணவரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கண்ணநல்லூர் கீழ தெருவைச் சேர்ந்தவர் சின்னத்துரை (22). இவர் கல்லூரியில் பி.எஸ்சி. இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் நெல்லை அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம் செல்போனில் பேசி பழகி வந்தார்.
இந்நிலையில் சின்னத்துரை, அந்த சிறுமியிடம் உனது நிர்வாண படத்தை செல்போனில் எடுத்து அனுப்புமாறு கூறி தொந்தரவு செய்து வந்தார். மேலும் அவர் இதுகுறித்து சிறுமியின் செல்போனுக்கும் வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பியிருந்தார். இதற்கிடையே சிறுமியின் செல்போனை அவருடைய தாயார் வாங்கி பார்த்தார்.
அப்போது நிர்வாண படம் அனுப்புமாறு சின்னத்துரை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பியிருந்த தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிறுமியின் தாயார் சேரன்மாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சின்னத்துரையை கைது செய்தனர். சிறுமியிடம் நிர்வாண படம் அனுப்புமாறு தொந்தரவு செய்த கல்லூரி மாணவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 3, ஜூலை 2025 8:52:46 AM (IST)

சங்கரன்கோவில் தி.மு.க. நகராட்சி தலைவி பதவி இழந்தார்: சொந்த கட்சி கவுன்சிலர்களே கவிழ்த்தனர்!
வியாழன் 3, ஜூலை 2025 8:51:16 AM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

விதிமீறல் : பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!
புதன் 2, ஜூலை 2025 11:29:00 AM (IST)

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)
