» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி 7வது சுற்று திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், வானியன்குளம் கிராமத்தில் இன்று கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 7வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தொடங்கி வைத்தார்.
கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் நோயானது நோய் பாதித்த மாடுகளிலிருந்து மற்ற மாடுகளுக்கு நேரடியாக தொற்றும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மாடுகளிலிருந்து தீவனம், தீவனத் தட்டுகள், தண்ணீர், வைக்கோல், கால்நடைகளின் இதர உபகரணங்கள் மற்றும் மனிதர்கள் மூலமும் பரவும் இந்த நோய் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் இந்த நோய் அதிகமான கால்நடைகளுக்கு பரவுகின்றது.
இதனால், கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைகிறது. எருதுகளின் வேலை செய்யும் திறன் குறைகிறது. கறவை மாடுகள் சினை பிடிப்பது குறைகிறது. இளம் கன்றுகளின் இறப்பு நேரிடுகிறது. இன்றைய தினம், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் (NADCP) கீழ் மாடுகளுக்கான கால் மற்றும் வாய் நோய் நோய் தடுப்பூசி 7வது சுற்று திட்ட முகாம் சேரன்மாதேவி ஒன்றியம், மேலச்செவல் கால்நடை மருந்தக பகுதிக்குட்பட்ட வாணியங்குளம் கிராமத்தில் நடைபெற்றது.
இம்முகாமில் 240 மாடுகள் மற்றும் 10 கன்றுகுட்டிகளுக்கு கால் மற்றும் வாய்நோய் நோய் தடுப்பூசி போடப்பட்டது. இன்று முதல் 31.07.2025 வரை மாவட்டம் முழுவதும் 1,41,800 மாடுகளுக்கு தடுப்பூசி கால்நடை மருந்தகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும். எனவே, கால்நடை வளர்ப்போர் இத்தருணத்தை பயன்படுத்தி எந்தவித விடுபாடுமின்றி தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
இம்முகாமில், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சங்கரநாராயணன், துணை இயக்குனர் ராஜராஜேஸ்வரி, ஆவின் பொது மேலாளர் சரவணமுத்து மற்றும் துணை பதிவாளர் பால்வளம் சைமன் சார்லஸ், மேலச்செவல் பேரூராட்சி தலைவர் அன்னபூரணி, உதவி இயக்குனர்கள் மகேஷ்வரி, ஜான் ரவிக்குமார், முருகன், பொன்மணி மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் நாகூர்மீரான், ரஞ்சித், முபாரக், சரண்யா, கோகுல், மஞ்சு, கால்நடை ஆய்வாளர்கள் சீதா, பாலமுருகன், மந்திரமூர்த்தி மற்றும் உதவியாளர்கள் ரமா, திரு,சிவன் பாண்டியன், ஆண்டி, முத்து, தர்மலிங்கம், 15 வார்டு உறுப்பினர் தங்கம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)
