» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாநகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வியாழன் 10, ஏப்ரல் 2025 5:07:15 PM (IST)

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் சாலை பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் இரா சுகுமார் மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். கன்டிய பேரி மருத்துவமனை செல்லும் சாலை மற்றும் மருத்துவமனையில் உள் கட்டமைப்பு வசதிகள் முறையாக உள்ளனவா, போதுமான மருந்துக்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளார்களா எனவும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
அதனை தொடர்ந்து டவுண் தாமரைக்குளம் செல்லும் சாலை, கிழ ரத வீதி சாலை, சாமி சன்னதி சாலை மற்றும் அப்பகுதிகளில் மழை நீர் செல்லும் ஓடைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, தொடர்ந்து பேட்டை - பழைய பேட்டை இணைப்பு சாலையில் உள்ள கனரக வாகன முனையகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்தும் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்கள் மழைக்காலங்களில் வெள்ள நீர் தங்கு தடை இன்றி செல்வதற்கு வாய்க்கால்களை சரியான முறையில் தூர்வாரி எந்த விதமான அடைப்புகளும் இல்லாமல் கண்காணிக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள் மேலும் கோவிலுக்கு வரும் வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பாதுகாப்பாக வாகன காப்பகங்களில் நிறுத்தி வைப்பதற்கும் முறையான ஏற்பாடுகள் செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவித்தார்கள்.
ந்த ஆய்வின் போது திருநெல்வேலி கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா, மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நைனார் குளம்சாலையில் சந்தை அருகில் வெள்ள நீர் கால்வாய் மற்றும்சாலை பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் நெல்லை மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர், அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 3, ஜூலை 2025 8:52:46 AM (IST)

சங்கரன்கோவில் தி.மு.க. நகராட்சி தலைவி பதவி இழந்தார்: சொந்த கட்சி கவுன்சிலர்களே கவிழ்த்தனர்!
வியாழன் 3, ஜூலை 2025 8:51:16 AM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

விதிமீறல் : பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!
புதன் 2, ஜூலை 2025 11:29:00 AM (IST)

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)
