» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாளை., அருகே பைக் மீது கார் மோதியதில் கணவன்-மனைவி பலி : மகன் படுகாயம்
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:21:10 PM (IST)
பாளையங்கோட்டை அருகே பைக் மீது கார் மோதியதில் கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மகனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆறாம்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் பாதாளமுத்து (45). லாரி டிரைவர். இவருடைய மனைவி கோதை நாச்சியார் (43). இவர்களுடைய மகன் சுரேஷ் (16), அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் பங்குனி உத்திர விழாவையொட்டி பாதாளமுத்து மோட்டார் சைக்கிளில் மனைவி, மகனுடன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். அவர்கள் கோவிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு மீண்டும் நெல்லை வழியாக ஆறாம்பண்ணை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
பாளையங்கோட்டை அருகே வி.எம்.சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது, எதிரே திருச்செந்தூர் பகுதியில் இருந்து செங்கோட்டை நோக்கி ஒரு கார் வந்தது. அந்த கார் எதிர்பாராதவிதமாக பாதாளமுத்து ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது பயங்கரமாக மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த பாதாளமுத்து, கோதை நாச்சியார், சுரேஷ் ஆகிய 3 பேரும் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர்.
உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோதை நாச்சியார் பரிதாபமாக இறந்தார். பாதாளமுத்து, சுரேஷ் ஆகியோரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி பாதாளமுத்து நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார்.
சுரேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாளையங்கோட்டை அருகே கோவிலுக்கு சென்று திரும்பியபோது, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கணவன்-மனைவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 3, ஜூலை 2025 8:52:46 AM (IST)

சங்கரன்கோவில் தி.மு.க. நகராட்சி தலைவி பதவி இழந்தார்: சொந்த கட்சி கவுன்சிலர்களே கவிழ்த்தனர்!
வியாழன் 3, ஜூலை 2025 8:51:16 AM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

விதிமீறல் : பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!
புதன் 2, ஜூலை 2025 11:29:00 AM (IST)

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)
