» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தொழில் முனைவோர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி : புதிய தயாரிப்புகளை ஆட்சியர் வெளியிட்டார்!
சனி 24, மே 2025 5:28:05 PM (IST)

திருநெல்வேலியில் நேரடி நுகர்வோர் வர்த்தகம், மின்வணிகம் உள்ளிட்ட தொழில் முனைவோர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியில் புதிய தயாரிப்புகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வெளியிட்டார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் இணைந்து வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்முனைவோர், நேரடி நுகர்வோர் வர்த்தகம் மற்றும் மின்வணிகம் செய்யும் தொழில்முனைவோர்களுக்கு இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், புதிய தயாரிப்புகளை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் இணையதளம் அல்லது செயலிகள் மூலமாக பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பது, ஒரு நிறுவனத்தின் பெயர், லோகோ, நம்பிக்கை, தரம் போன்றவற்றின் அடிப்படையில் அதை மக்கள் மனதில் நிலைநிறுத்தும் செயல்முறை, வணிகமாதிரி உருவாக்கம் (Business மோடெல்லிங்) நிதி மாதிரி கட்டமைப்பு (Financial மோடெல்லிங்), ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விதிமுறைகள், உணவு பாதுகாப்பு விதிமுறைகள் ஆகிய தலைப்புகளில் அதுசார்ந்த நிபுணர்கள் மற்றும் வல்லுநர்களால் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் 30-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்துகொண்டார்கள்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் நிறைவு விழாவில், மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், கலந்து கொண்டு, புதிய தயாரிப்புகளை வெளியிட்டு, தெரிவிக்கையில்: இரண்டு நாட்கள் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் நிறைவு விழாவில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் இணைந்து, மாதந்தோறும் இத்தகைய திறன் மேம்பாட்டு பயிற்சியினை நடத்தவுள்ளது.
தொழில்முனைவோர் தங்களுடைய வணிக திறனையும் அதற்கான வாய்ப்புகளையும் மேம்படுத்த வேண்டும். தங்களின் தொடக்க முயற்சிகளில் லாப நிகர நிலையை விரைவில் அடைய வேண்டும். தங்களுடைய வணிக முயற்சியினை பாதி வழியில் கைவிடக்கூடாது. தொழில்கள் தொடர்ந்து வளர வேண்டிய தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முக்கியத்துவமான ஒரு பகுதியாக, இந்த தயாரிப்புகள் இங்கு பயிற்சி பெற்ற சிறந்த புத்தொழில் நிறுவனங்களால் மற்றும் உழைப்பாளர்களின் முயற்சியின் விளைவாக உருவானவை. இவை மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கும், உள்ளுர் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பயிற்சி முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, திருநெல்வேலி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் முருகன், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க சிறப்புத் துணைத் தலைவர் ஸ்டாலின் ஜேக்கப், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் திருநெல்வேலி மண்டலம் மேலாளர் ராகுல், தூத்துக்குடி மண்டல மேலாளர் ஜிஜின்துரை, தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் மூத்த திட்ட மேலாளர் கவிமுகில் மற்றும் அர்ச்சனா, ப்ராண்ட்மிண்ட்ஸ் நிறுவனர் வசந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

முத்தூர் ஊராட்சியில் புதிய தொழில் பேட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:25:13 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)
