» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின் 7 வினாடி சோதனை வெற்றி : இஸ்ரோ அறிவிப்பு
புதன் 28, மே 2025 12:09:44 PM (IST)

மகேந்திரகிரி மையத்தில், ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின்களை தயாரிக்கும் பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில் செயற்கைகோள்களை பொருத்தி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. இதுதவிர நிலவு ஆய்வுக்காக சந்திரயான் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து சூரியன் ஆய்வுக்காக ஆதித்யா எல்-1 என்ற திட்டமும் செயல்படுத்துவதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இவற்றை தொடர்ந்து இந்தியாவின் கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், ககன்யான் செயற்கைகோளை கொண்டு செல்லும் விகாஸ் என்ஜின்களை தயாரிக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி மேம்படுத்தப்பட்ட விகாஸ் என்ஜின் 7 வினாடி சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விஞ்ஞானிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்தச் சோதனை வெற்றியடைந்ததாக இஸ்ரோ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

முத்தூர் ஊராட்சியில் புதிய தொழில் பேட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:25:13 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)
