» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பொதுமக்களுக்கு தொல்லை : 33 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறை!
வியாழன் 29, மே 2025 10:45:40 AM (IST)
பாபநாசம் பகுதியில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த 33 குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சுந்தராபுரம் தெரு - வி.கே.புரம், வேம்பையாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக சென்று அட்டகாசம் செய்து வந்தன.
இந்த குரங்குகளின் அட்டகாசத்தை தாங்க முடியாமல் பொது மக்கள் வனத்துறையினரிடம் குரங்குகளை பிடிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில், வனத்துறையினர் அப்பகுதிகளில் குரங்குகளை பிடிக்க பொறி வைத்தனர்.
இந்த நிலையில் 33 குரங்குகள் பாபநாசம் வனச்சரக வனப்பணியாளர்கள் மூலம் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வராதவாறு அடர்ந்த வனப்பகுதிக்குள் நல்ல முறையில் திரும்ப விடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

முத்தூர் ஊராட்சியில் புதிய தொழில் பேட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:25:13 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)
