» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கமல்ஹாசன் கருத்தில் எந்தத் தவறும் இல்லை: நெல்லையில் சபாநாயகர் அப்பாவு
வியாழன் 29, மே 2025 5:27:57 PM (IST)

தமிழில் இருந்து கன்னடம் தோன்றியதாக கமல்ஹாசன் சொன்ன கருத்தில் எந்தத் தவறும் இல்லை என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் "அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அவருக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். இந்த தண்டனைக்கு பின்னர் பெண்களை சகோதரிகளாகவும் தாய்மார்களாகவும் மதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பெண் சார்பில் புகார் வந்தவுடன் உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளது.
அரசு தரப்பில் வழக்கறிஞர் கடுமையான தண்டனையை பெற்றுக் கொடுக்க வாதிட்டுள்ளார். தமிழில் இருந்துதான் கன்னடம் உருவானதாக நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்து சரியானது. மதராஸ் மாகாணமாக இருந்தபோது மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படாததற்கு முன்பு 18 மொழிகளைக் கற்றுத் தெரிந்த ராபர்ட் கால்டுவெல் ஆய்வு செய்து திராவிட மொழிகளுக்கு ஒப்பிலக்கணம் எழுதியுள்ளார்.
சமஸ்கிருதத்தில் இருந்துதான் தமிழ் உள்ளிட்ட மொழிகள் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், அதனை ராபர்ட் கால்டுவெல் ஆய்வு செய்து மறுத்துள்ளார். திராவிடக் குடும்பத்தின் முதல் மொழி தமிழ் எனக் கூறியுள்ளார். கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் தமிழில் இருந்துதான் பிறந்துள்ளதாக கூறியுள்ளார். தான் கூறியதற்கு ஆதாரங்கள் உள்ளதாக கமல்ஹாசன் சொன்னது சரியானது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நான்காண்டு ஆட்சி மிகச் சிறப்பாக உள்ளது. மீண்டும் இந்த ஆட்சியைத் தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்படுபவர்கள் யார் எனக் கண்டறிந்து முதல்வர் அவர்களுக்கு வாய்ப்பை வழங்கியுள்ளார். மதரீதியாக செயல்படுவதாகக் கூறுவது தவறு" என்றார். பேட்டியின்போது சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

முத்தூர் ஊராட்சியில் புதிய தொழில் பேட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:25:13 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)
