» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கணவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய பெண் கைது : நடத்தை சந்தேகத்தால் விபரீதம்!
சனி 31, மே 2025 8:48:49 AM (IST)

நெல்லை அருகே நடத்தை சந்தேகத்தில் கணவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை அருகே கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (42). ஆட்டோ டிரைவரான இவருக்கு முத்துலட்சுமி (34) என்ற மனைவியும், 3 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. 25 நாட்களுக்கு முன்பு முத்துலட்சுமி கணவரிடம் தகராறு செய்து விட்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் 2 பேரையும் அழைத்து விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் முத்துலட்சுமி கடந்த 4 நாட்களுக்கு முன் கணவர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று காலை வீட்டில் பாலசுப்பிரமணியன் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது முத்துலட்சுமி தனது கணவர் மீது தண்ணீரை ஊற்றி எழுப்பினார்.
இதில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது முத்துலட்சுமி தான் ஏற்கனவே கொதிக்க வைத்து இருந்த எண்ணெய்யை பாலசுப்பிரமணியன் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது. இதில் வயிற்று பகுதியில் இருந்து கால் வரை அவரது உடல் வெந்தது. வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிவந்திபட்டி போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், பாலசுப்பிரமணியனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக முத்துலட்சுமி சந்தேகமடைந்தார். இதுதொடர்பாகவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. நேற்றும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் முத்துலட்சுமி கொதிக்கும் எண்ணெய்யை தனது கணவர் மீது ஊற்றியது தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் சுதா வழக்குப்பதிந்து முத்துலட்சுமியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)

NAAN THAANமே 31, 2025 - 02:29:08 PM | Posted IP 172.7*****