» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்!

புதன் 10, டிசம்பர் 2025 4:45:40 PM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம் செய்தார். 

நடிகர் தனுஷ் இன்று நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.  சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்து தனுஷ் அங்கிருந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட அப்போது அங்கிருந்த பணியாளர்களும் தனுஷுடன் புகைப்படம் எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

ஆனாலும் தயக்கத்தோடு தயங்கி நிற்க அதற்கு தனுஷ் ஒதுங்கி நின்றவர்களை கூப்பிட்டு அவர்களோடு புகைப்படம் எடுத்து இருக்கிறார். இந்த வீடியோக்கள் வெளியாகி தனுஷை பலரும் பாராட்டி வருகின்றனர். சினிமாவில் அறிமுகமான சமயத்தில் தனுஷ் அதிகமாக விமர்சிக்கப்பட்டாலும் இப்போது தன்னுடைய திறமையால் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

தான் மட்டுமல்லாமல் சினிமாவில் இளம் தலைமுறை ஒரு சிலருக்கும் வாய்ப்பு கொடுத்து அவர்களுடைய வெற்றிக்கும் அடித்தளம் போட்டு இருக்கிறார். என்ன தான் சினிமாவில் டாப் ஹீரோவாக இருந்தாலும் நான் பக்தி என்று வந்துவிட்டால் எப்போதும் கடவுளுக்கு அடிமை என்று கைகூப்பி இவர் வழிபட்ட விதத்தை பலரும் பாராட்டியும் வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory