» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)
சிறுபான்மையின கைவினைக் கலைஞர்கள் கைவினைக் கலைஞர் கடன் திட்டத்தில் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (TAMCO) கீழ் விராசாத் கைவினைக் கலைஞர் கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் தையல் தொழில் / பாய்முடைதல் / கூடை பின்னுதல் / தறி நெய்தல் / ஆரி ஓர்க். / எம்பிராய்டரி கைவினைப் பொருட்கள் செய்தல் / மரச்சாமான்கள் செய்தல் மற்றும் இதர கைவினைத் தொழில்கள் மேற்கொள்ளும் சிறுபான்மையின கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
திட்டம் -1-ன் கீழ் பயன்பெற விரும்பும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையினக் கைவினைக் கலைஞர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.300 இலட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்கு அதிக பட்ச கடன் தொகை ரூ.10.00 இலட்சம் வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் ஆண் பயனாளிகளுக்கு 5% மற்றும் பெண் பயனாளிகளுக்கு 4% ஆண்டு வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும்.
திட்டம் -2 ன் கீழ் பயன்பெற நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையினக் கைவினைக் கலைஞர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8.00 இலட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்கு அதிக பட்ச கடன் தொகை ரூ.10.00 இலட்சம் வழங்கப்படும். மேலும் ஆண் பயனாளிகளுக்கு 6% மற்றும் பெண் பயனாளிகளுக்கு 5% ஆண்டு வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும். மேற்படி திட்டம் -1 மற்றும் திட்டம் 2 ன் கீழ் பெறப்படும் கடனை 5.ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.
ஜெயின் போன்ற விராசத் எனவே. இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் சிறுபான்மையினத்தைச் சார்ந்த கைவினைக் கலைஞர்கள் மேற்படி கைவினைக் கலைஞர் கடன் திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் விண்ணப்பங்களை https://tamco.tn.gov.in/ என்ற இணையதள முகவரி அல்லது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் அணுகி பெற்று கொள்ளலாம் மேற்படி திட்டத்தின் கீழ் அதிக அளவில் விண்ணப்பித்து பயனடையுமாறு ஆட்சியர் இரா.சுகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

தென்காசி வக்கீல் கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:20:02 AM (IST)

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 11, டிசம்பர் 2025 8:27:54 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்!
புதன் 10, டிசம்பர் 2025 4:45:40 PM (IST)

அரசு ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை: கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை!
புதன் 10, டிசம்பர் 2025 8:42:41 AM (IST)

நெல்லை அருகே பைக் விபத்தில் கல்லூரி மாணவி பலி - உறவினர் படுகாயம்!
புதன் 10, டிசம்பர் 2025 8:24:47 AM (IST)


