» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசு ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை: கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை!

புதன் 10, டிசம்பர் 2025 8:42:41 AM (IST)

களக்காட்டில் அரசு ஊழியர் வீட்டில் கதவை உடைத்து 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

நெல்லை மாவட்டம் களக்காடு பாரதிபுரம் கீழ தெருவைச் சேர்ந்தவர் அய்யம்பெருமாள் (70). இவர் வருவாய்த்துறையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். பிள்ளைகளுக்கு திருமணமாகி வெளியூர்களில் வசிக்கின்றனர். அய்யம்பெருமாள் மனைவியுடன் பாரதிபுரம் வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் அய்யம்பெருமாள் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மனைவியுடன் சென்றார். பின்னர் அவர்கள் நேற்று காலையில் தங்களது வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் அடிப்பகுதி உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அலமாரியில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், 2 செல்போன்கள், பேட்டரிகள் மற்றும் வெளியே நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவை கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

அய்யம்பெருமாளின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து நகைகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளையும் திருடிச் சென்றுள்ளனர். கொள்ளைபோன நகைகள், பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் ஆகும்.

இதுகுறித்து அய்யம்பெருமாள் களக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே நாங்குநேரி டிஎஸ்பி தர்ஷிகா நடராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

களக்காடு சுப்பிரமணியபுரத்தில் கடந்த 7-ந்தேதி இரவில் மளிகைக்கடையின் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதனால் களக்காடு பகுதியில் தொடர் துணிகர திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory