» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்
சனி 31, மே 2025 4:33:04 PM (IST)

திருநெல்வேலியில் புகையிலை மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்து மாணவர்களுடன் கலந்து கொண்டார்.
திருநெல்வேலி பாளையங்கோட்டை அண்ணாநகர் என்சிசி அலுவலகம் அருகில் இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட சுகாதார அலுவலகம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, திருநெல்வேலி மாவட்ட பிரம்மாகுமாரிகள் இயக்கத்துடன் இணைந்து போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும் மற்றும் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்து மாணவர்களுடன் 2 கிலோ மீட்டர் தூரம் பேரணியில் கலந்து கொண்டார்.
இப்பேரணி பாளையங்கோட்டை NCC Battalian அலுவலகத்திலிருந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வழியாக மாவட்ட சுகாதார அலுவலகம் வரை, 2 கிலோ மீட்டர் வரை நடைபெற்றது. இதில் NCC மாணவ மாணவியர்கள், சேரன்மகாதேவி, மானூர் மற்றும் ரெட்டியார்பட்டி வட்டார மருத்துவர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், ஆய்வாளர்கள், அலுவலர்கள், மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் என மொத்தம் 500 நபர்கள் கலந்துகொண்டனர்.
இப்பேரணியில் புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருளான "புகையிலை தொழில்துறையின் வசீகரிக்கும் தந்திரங்களை அம்பலப்படுத்துதல்" பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மேலும் புகையிலை உட்கொண்டால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போதை மற்றும் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கோஷங்கள் எழுப்பியும் மற்றும் பதாகைகள் ஏந்தி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, திருநெல்வேலி மாவட்ட பிரம்மாகுமாரிகள் இயக்கத்துடன் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மூலம் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு இன்று முதல் 30 நாட்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று விழிப்பணர்வு ஏற்படுத்த தொடங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார் தலைமையில் மாணவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் கீதாராணி, மாவட்ட கலால் ஆணையர் வள்ளிக்கண்ணு, கலால் வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)
