» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காற்றாலை நிறுவனத்தில் இரும்பு பிளேட்டுகள் திருட்டு: 3 பேர் கைது
செவ்வாய் 3, ஜூன் 2025 5:25:58 PM (IST)
தெற்கு வாகைகுளத்திலுள்ள காற்றாலை நிறுவனத்தில் இரும்பு பிளேட்டுகளை திருடிய வழக்கில் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், மானூர், தெற்கு வாகைகுளத்திலுள்ள காத்தாடி கம்பெனியில் சூப்பர்வைசராக கயத்தாறு, உசிலங்குளம், கீழத் தெருவை சேர்ந்த கருப்பசாமி (45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 30.5.2025 அன்று காற்றாலை நிறுவனத்தில் வேலைகள் நடைபெறும் இடத்திற்கு சென்று பார்த்தபோது காற்றாலைக்கு மாற்ற வேண்டிய 15 இரும்பு கனெக்சன் பிளேட்டுகளை காணவில்லை.
இதுகுறித்து கருப்பசாமி மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் அங்கு வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் விசாரணை மேற்கொண்டார். அதில் தென்காசி மாவட்டம், ஊத்துமலை, கல்லத்திகுளம், வடக்கு தெருவை சேர்ந்த மோசை(43), முத்துக்கனி(38), களக்குடியை சேர்ந்த முருகன்(54) ஆகிய 3 பேரும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்து. இதனையடுத்து மேற்சொன்ன 3 பேரையும் கைது செய்த நிலையில், அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த உரிய சட்ட நடவடிக்கை எடுத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

தென்காசி வக்கீல் கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:20:02 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 11, டிசம்பர் 2025 8:27:54 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்!
புதன் 10, டிசம்பர் 2025 4:45:40 PM (IST)


