» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வீடுபுகுந்து பெண் கழுத்தை அறுத்துக் கொலை : தோல் வியாபாரி கைது
செவ்வாய் 3, ஜூன் 2025 5:47:10 PM (IST)
பாவூர்சத்திரம் அருகே வீடுபுகுந்து பெண்ணை கழுத்தை அறுத்துக்கொன்ற வழக்கில் தோல் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

அப்போது வீட்டுக்குள் நைசாக புகுந்த மர்மநபர் திடீரென்று உமாவை கழுத்தை அறுத்துக்கொலை செய்து விட்டு தப்பி சென்றார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே உமாவின் கணவர் பரமசிவன் போலீசில் புகார் மனு அளித்தார். அதில், எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் தோல் வியாபாரியான மணிகுமார் (44) எனது மனைவி உமாவிடம் நட்பாக பழகி வந்தார்.
பின்னர் உமா, மணிகுமாரிடம் பழகுவதை நிறுத்தி விட்டார். தொடர்ந்து மணிகுமார் தன்னிடம் மீண்டும் பழகுமாறு உமாவிடம் தொல்லை கொடுத்து மிரட்டி வந்தார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க இருந்தேன். இதனை அறிந்த மணிகுமார் வீடுபுகுந்து உமாவை கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து தலைமறைவான மணிகுமாரை பிடிப்பதற்காக போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், பெண்ணை கழுத்தை அறுத்துக்கொன்ற தோல் வியாபாரி மணிகுமாரை பாவூர்சத்திரம் போலீசார் சற்று முன் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)
