» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு சீருடைகள் : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்!
புதன் 4, ஜூன் 2025 4:19:00 PM (IST)

பாளையங்கோட்டை குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு சீருடைகள் மற்றும் முன் பருவ கல்வி புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டம் முத்தூரில் உள்ள குழந்தைகள் மையத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட குழந்தைகளை வரவேற்று குழந்தைகளுக்கு சீருடைகள், முன்பருவ கல்வி புத்தகங்கள், செயல்பாடுகள் குறித்த விவர தொகுப்புகள், குழந்தைகள் ஆய்வு அட்டைகள் மற்றும் இலவச கல்வி உபகரண பொருட்களை வழங்கி புதிதாக இன்று (04.06.2025) குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் சேர்ந்துள்ள குழந்தைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், பூங்கொத்து கொடுத்து வரவேற்று தெரிவித்ததாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் 1261 குழந்தைகள் மையங்கள் உள்ளது. இதில் பாளையங்கோட்டை வட்டாரத்தில் 141 குழந்தைகள் மையங்கள் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 23,433க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளின் எடை மற்றும் உயரம் மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை மேற்கொண்டு வருகிறது. அனைத்து குழந்தைகளுக்கும் இணை உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஊட்டச்சத்துகள் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்கள் ஊட்டசத்துகளை அதிகரிப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி வழங்கப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடுகள் இல்லா மாவட்டமாக உருவாக்க தொடர்ந்து சுகாதாரத்துறையும் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெனிபா, புள்ளியியல் ஆய்வாளர் சம்சுதீன், வட்டார வளர்ச்சி அலுவலர் நெல்லையப்பன், ஊராட்சி மன்றத் தலைவர் சுடலைகன்னு மற்றும் அரசு அலுவலர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)
