» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசு அலுவலகங்களில் கழிவுகள் சேகரித்து மறுசுழற்சி திட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
வியாழன் 5, ஜூன் 2025 3:34:46 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் கழிவுகள் சேகரித்து மறுசுழற்சி / மீள்பயன்பாடு மேற்கொள்ளும் ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அனைத்துத் துறைகளுக்கும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு அரசு எடுத்து வரும் பல முன்னெடுப்புகளில் தற்போது கழிவு மேலாண்மையில் ஒரு சிறப்பு முன்னெடுப்பாக தூய்மை இயக்கத்தினை தொடங்கி அதனை செயல்படுத்திட தூய்மை தமிழ்நாடு நிறுவனம் (CTCL) என்ற அமைப்பு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் செயல்பாட்டின் முதற்கட்டமாக, உலக சுற்றுச்சூழல் தினமான ஜுன் 5ம் தேதி இன்று மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும் நோக்கில் அவ்வலுவலக கழிவுகளை சேகரிக்கும் மாபெரும் முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், மின்னணு கழிவுகள், உலோகக் கழிவுகள், காகித கழிவுகள், கண்ணாடி கழிவுகள், பயன்படுத்த இயலாத மரத் தளவாடங்கள் போன்ற பலவிதமான கழிவுகளைச் சேகரிக்கும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
கழிவுகள் நிலப்பரப்பில் குவிக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் பொருட்டு இந்த முன்னெடுப்பில், சேகரிக்கப்பட்ட கழிவுகள் அனைத்தும் உயர் தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டு மீள்பயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
இப்பணியின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)
