» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தகவல் சேகரிப்பு பயிற்சி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
சனி 7, ஜூன் 2025 4:45:54 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தகவல் சேகரிப்பு பணியில் ஈடுபடவுள்ள களபணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் காதுகேளாதோர் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தகவல் சேகரிப்பு பணியில் ஈடுபட உள்ள கள பணியாளர்களுக்கு பணிநியமன ஆணை மற்றும் சிறப்பு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு உரிமைகள் திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் ஒரு முக்கிய திட்டமாகும். இத்திட்டத்தின் வாயிலாக மாற்றுத்திறனாளிகளின் சமூக தகவல் சேகரிப்பு பணி ஈடுபடவுள்ளது. இப்பணிக்கு பேரூராட்சி, நகராட்சிகள் உள்ளடக்கிய ஒரு ஒன்றியத்திற்கு 6 சமூக கண்காணிப்பாளர் (Community Facilitators (CF), 14 சமூக மறுவாழ்வு கள பணியாளர்கள் (Community Resource Worker (CRW) என 20 நபர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 9 ஒன்றியங்கள் என 180 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்பணியாளர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்த எல்லாருக்கும் எல்லாம் என்ற திட்டத்தின் படி மாற்றுத்திறாளிகள் அனைவருக்கும் அனைத்துத்திட்டங்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளதா என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்றும், அனைத்து மாற்றுத்திறனாளிகளும் முறையாக கணக்கிடப்பட்டுள்ளார்களா என்பது போன்ற சமூக தகவல் சேகரிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
உரிமைகள் திட்டத்தின் கீழ் உள்ளடங்கள் (Inclusion), அணுகல் (Accessability) மற்றும் வாய்ப்புகள் (Opportunities) என்ற அடிப்படையில் திட்டமிடப்பட்டு, கடைகோடியில் வசிப்பவர்க்கும் சமூக பராமரிப்பு சேவைகளை பயன்கள் அளிப்பதை மேம்படுத்துவதற்காகவும், மாற்றுத்திறனாளிகளின் தற்சார்பு திறன்களை மேம்படுத்த முன்மாதிரி திட்டங்களை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இன்று நடைபெற்ற நிகழ்வில், 180 கள பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கி, மூன்று நாட்கள் நடைபெறவுள்ள சிறப்பு பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து, திருநெல்வேலி மாவட்டத்தில் முதன்மை மாவட்டமாக கொண்டுவருவதற்கான சிறப்பான கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சு.சிவசங்கரன், உரிமைகள் திட்ட மேலாளர் சங்கர் சகாய ராஜ், சுவஸ்திக் தொண்டு நிறுவனம் நிர்வாக செயலாளர் தமிழ்துரை, பிளாரன்ஸ் சுவைன்சன் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜெக்கப், பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்ஸி ஹெப்சிபா உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)





