» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கிணற்றை தூர்வாரியபோது பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை கண்டெடுப்பு
புதன் 11, ஜூன் 2025 8:30:24 AM (IST)
மூலைக்கரைப்பட்டி அருகே கிணற்றை தூர்வாரியபோது பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்காக கிணற்றில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றினர். தொடர்ந்து கிணற்றின் அடியில் உள்ள சகதியை அப்புறப்படுத்தினர். அப்போது கிணற்றின் அடியில் சுமார் 1½ அடி உயரம் கொண்ட ஐம்பொன்னாலான கருடாழ்வார் சிலை கண்டெடுக்கப்பட்டது. மிகவும் பழமைவாய்ந்த இந்த சிலையின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, நாங்குநேரி தாசில்தார் பாலகிருஷ்ணன், யூனியன் ஆணையாளர் யமுனா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஐம்பொன் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து சிலையை தாலுகா அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர்.
பழங்கால ஐம்பொன்னாலான கருடாழ்வார் சிலையை ஏதேனும் கோவிலில் இருந்து திருடி வந்த கும்பல் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக அதனை கிணற்றில் வீசிச் சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் மூலைகரைப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும், தொல்லியல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)
